பிடிவாதமே இவர்களின் பலம்! எந்த ராசிக் குழந்தைகள் தெரியுமா?
Children Born Under These Zodiac Signs Are Extremely Stubborn : ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம், ஒவ்வொரு ராசியில் பிறந்த குழந்தைகளுக்கும் தனித்தனி குணங்கள் இருக்கும். அதிலும் சில ராசி குழந்தைகள் மிகவும் பிடிவாத குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
தாங்கள் நினைத்ததைச் சாதிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பதுடன், எதற்கும் எளிதில் விட்டுக்கொடுக்க மாட்டார்கள்.இத்தகைய பிடிவாதம் சில நேரங்களில் பெற்றோருக்குச் சவாலாகவும் எரிச்சலாகவும் இருந்தாலும், அதுவே அவர்களின் பலமாகவும் அமையலாம்.

மன உறுதி, விடாமுயற்சி, தலைமைப் பண்பு போன்ற சிறந்த குணங்களும் இவர்களிடம் காணப்படும். அப்படி, ஜோதிடத்தின்படி அதிக பிடிவாத குணம் கொண்ட குழந்தைகள் பிறக்கும் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
ரிஷபம்

சுக்கிரனால் ஆளப்படும் ரிஷப ராசிக் குழந்தைகள் அமைதியானவர்களாகவும், எதார்த்தமானவர்களாகவும் இருப்பார்கள். அதேவேளை, பிடிவாத குணமும் அதிகம் கொண்டவர்கள்.
ஒரு முடிவை எடுத்துவிட்டால், அதை மாற்றுவது கடினம். திடீர் மாற்றங்களை விரும்பாத இவர்கள், புதிய சூழலுக்குப் பழகிக்கொள்ள கால அவகாசம் தேவைப்படுவார்கள். கட்டாயப்படுத்தினால் பிடிவாதம் மேலும் அதிகரிக்கும்.
எனவே, மென்மையான வழிகாட்டுதலும் சீரான நடைமுறைகளும் இவர்களை நல்வழிப்படுத்த உதவும். இயற்கை, ஆடம்பரம் மற்றும் நிலைத்தன்மை ஆகியவற்றை அதிகம் விரும்புவார்கள். இவர்களை அதிகாரத்தால் அடக்குவது நடக்காத காரியம்.
மேஷம்

செவ்வாயால் ஆளப்படும் மேஷ ராசிக் குழந்தைகள் மிகுந்த ஆற்றலும் தைரியமும் கொண்டவர்கள். அனைத்தையும் தங்கள் விருப்பப்படியே செய்ய நினைப்பார்கள்.
பிறர் சொல்வதைக் கேட்டு நடப்பதை விரும்பாத இவர்கள், 'முடியாது' என்ற வார்த்தையைக் கேட்டால் அதைச் சாதித்துக் காட்ட வேண்டும் என்ற உறுதியுடன் செயல்படுவார்கள்.
தங்களை நிரூபிக்க வேண்டும் என்ற எண்ணமே இவர்களின் பிடிவாதத்திற்குக் காரணம். இந்தப் பிடிவாதம் பல நேரங்களில் அவர்களுக்குச் சாதகமாகவும் அமையும்.
சிம்மம்

சூரியனால் ஆளப்படும் சிம்ம ராசிக் குழந்தைகள் தாராள மனமும் தன்னம்பிக்கையும் கொண்டவர்கள். பெற்றோரும் மற்றவர்களும் தங்களைப் பாராட்டி மதிக்க வேண்டும் என்று விரும்புவார்கள்.
புறக்கணிக்கப்படுவதாகவோ, பிறரால் கட்டுப்படுத்தப்படுவதாகவோ உணர்ந்தால் உடனடியாகப் பிடிவாதம் காட்டுவார்கள்.
குறிப்பாக, பொது இடங்களில் தங்கள் தவறுகளைச் சுட்டிக்காட்டுவதையோ திருத்துவதையோ விரும்புவதில்லை. அத்தகைய சூழல்களில் ஆக்ரோஷமாக நடந்துகொள்ளவும் வாய்ப்புள்ளது.
விருச்சிகம்

செவ்வாய் மற்றும் புளூட்டோவால் ஆளப்படும் விருச்சிக ராசிக் குழந்தைகள் உணர்ச்சிவசப்படுபவர்களாகவும், அமைதியானவர்களாகவும் இருப்பார்கள்.
ஆனால், அவர்களை மென்மையானவர்கள் என்று எண்ணிவிடக் கூடாது. அதிக மனஉறுதியும் பிடிவாதமும் கொண்டவர்கள். தங்களுக்கு வேண்டியதை அடையப் பொறுமையாகக் காத்திருந்து, திட்டமிட்டு அதைச் சாதிப்பார்கள்.
வெளிப்படையாகக் கோபத்தைக் காட்டாவிட்டாலும், அவர்களின் பிடிவாதம் ஆழமானது. கட்டாயப்படுத்துவதையோ ஏமாற்றுவதையோ விரும்பாத இவர்கள், மனம் புண்பட்டால் அதை எளிதில் மறக்கமாட்டார்கள்.
இங்கு குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அனைத்தும் பல்வேறு ஊடகங்கள் / ஜோதிடர்கள் / பஞ்சாங்கங்கள் / நம்பிக்கைகள் / ஆன்மீக நூல்கள் ஆகியவற்றில் இருந்து சேகரிக்கப்பட்டவையாகும். எங்கள் நோக்கம் தகவல்களை வழங்குவது மாத்திரமே. (மனிதன் தளம் இதற்கு பொறுப்பேற்காது).
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |