நடிகை நயன்தாரா வீட்டில் மற்றுமொரு விஷேசம்.. அப்பாவின் தலையில் ஏறி ஆட்டம் போட்ட மகன்கள்!
நடிகை நயன்தாரா வீட்டில் விக்னேஷ் சிவன் குழந்தைகளுடன் விளையாடும் புகைப்படமொன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
காதல் திருமணம்
தமிழ் சினிமாவில் லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருபவர் தான் நடிகை நயன்தாரா.
இவருக்கு இணையாக இன்று வரை தமிழ் சினிமாவில் யாரும் இல்லை என சினிமா வட்டாரங்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
இவர் தமிழ் சினிமாவில் இருக்கும் அனைத்து முன்னணி நடிகர்களுடன் நடித்த இவர், சுமார் 20 வருடங்களுக்கு மேலாக சினிமாவில் நடித்து வருகிறார்.
இதனை தொடர்ந்து,“ நானும் ரௌவுடி தான்” திரைப்படத்தை இயக்கிய இயக்குநர் விக்னேஷ் சிவனை காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள்.
இந்த நிலையில் தற்போது இவர்களுக்கு அழகிய இரண்டு ஆண் குழந்தைகள் இருக்கிறார்கள்.
அப்பாவின் தலையில் ஏறிய குழந்தைகள்
இவர்களின் வீட்டில் செய்யும் அட்டகாசங்களை விக்னேஷ் சிவன் புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளங்களில் பதிவிடுவதை வாடிக்கையாக வைத்துள்ளார்.
அந்த வகையில் தந்தையர் தின கொண்டாட்டத்தின் போது நயனின் குழந்தைகள் இருவரும் விக்னேஷ் சிவனின் தலையின் மேல் ஏறி வாழ்த்து கூறியுள்ளார்கள்.
இந்த புகைப்படத்தை பார்த்த நடிகை சமந்தா உட்பட பல பிரபலங்கள் தங்களின் வாழ்த்து செய்தியை தெரிவித்து வருகிறார்கள்.
“இவர்களின் குறும்புதனம் வரவர அதிகரித்து கொண்டே செல்கின்றது” என ரசிகர்கள் கருத்துக்களை பதிவிட்டு வருகிறார்கள்.