இது என்னடா சீரியலில் புது டுவிஸ்டா? பாக்கியாவை எதிர்க்க பழனிச்சாமியுடன் கைக்கோர்க்கும் கோபி!
பழனிச்சாமியுடன் கோபி இருக்கும் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியல் மற்ற சீரியல்கள் போல் அல்லாமல் பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் சீரியலாக ஓடிக் கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், கோபியிடம் இருந்து வீட்டை வாங்கிக் கொண்டு பாக்கியா குடும்பத்துடன் வாழ்ந்து வருகிறார்.
கோபி, இனியாவின் கல்லூரி படிப்பிற்கு கட்டணம் செலுத்த முடியாமல் தடுமாறிக் கொண்டிருக்கிறார்.
பழனிச்சாமியுடன் கைக்கோர்க்கும் கோபி
இந்த நிலையில் சீரியலில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் கோபி அவரின் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருந்து வருகிறார்.
அந்த வகையில் இரண்டாம் கதாநாயகராக இருந்து வரும் பழனிச்சாமியுடன் கோபி இருக்கும் புகைப்படத்தை கோபி பகிர்ந்துள்ளார்.
இதனை பார்த்த பாக்கியலட்சுமி ரசிகர்கள் ஷாக்காகியுள்ளார். அத்துடன் பகை என்பது சீரியலுக்கு மட்டுமா? என தங்களின் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |