இது என்ன பாக்கியலட்சுமியின் அடுத்த கட்டமா? திகைக்க வைத்து வைரல் புகைப்படம்
80 வயது தாத்தா போல் நரைத்த தலையுடன் காணப்படும் பாக்கியலட்சுமி கோபியின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைகாட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முன்னணியில் உள்ள சீரியல் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் பாக்கியா- கோபி இருவரும் கதாநாயகர்களாக நடித்து வருகிறார்கள். இதனை தொடர்ந்து புதிய திருப்பமாக பாக்கியா - கோபி - ராதிகா என மூன்று கதாபாத்திரங்களுடன் கதை நகர்ந்து கொண்டிருக்கிறது.
40 வயதை தாண்டிய இரு ஜோடிகள் தனது வாழ்க்கைக்கு தேவையான ஒரு துணையை தேர்ந்தெடுக்கும் வகையில் இந்த சீரியலின் கதைக்களம் கொண்டு செல்லப்படுகிறது.
பாக்கியலட்சுமி சீரியலில் நடிக்கும் பாக்கியா எனும் சுஜித்ராவிற்கு சீரியலில் நிறைய சீன்கள் வைக்கப்படுகிறது. இவர் தான் தற்போது இருக்கும் இல்லத்தரசிகளுக்கு சிறந்த முன்னுதாரணமாக இருந்து வருகிறார்.
புதிய அவதாரம் எடுத்த பாக்கியலட்சுமி கோபி
இந்த நிலையில் தற்போது பாக்கியலட்சுமியில் ஜெனிக்கு அடிபட்டு மருத்துவமனையில் ராதிகாவால் அனுமதிக்கப்பட்டுள்ளது.
இந்த தகவலை வீட்டிலுள்ள அனைவருக்கும் தொலைபேசியின் மூலம் கொடுத்துள்ளார்.
மேலும் சமூக வலைத்தளங்களில் ஆக்டிவாக இருக்கும் பாக்கியலட்சுமி கோபியின் புகைப்படம் வைரலாகி வருகிறது. அதில், தாத்தா கெட்டப் போட்டு மிரட்டலான போஸ் கொடுத்துள்ளார்.
இதனை பார்த்த ரசிகர்கள்,“ இது என்ன அடுத்த கட்டமா?” என கலாய்க்கும் வகையில் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.