கோபிக்கு எதிர்பாராத டுவிஸ்ட் கொடுத்த பாக்கியா! ஒரே செக்கில் வாயை அடைத்து போன பாட்டி
கோபிக்கு சுமார் இரண்டு இலட்சம் ரூபாயை முன்பணமாகக் கொடுத்து அனைவருக்கும் பாக்கியா ஷாக் கொடுத்துள்ளார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் தொடர் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் நடிப்பவர்கள் தன்னுடைய முழுபங்களிப்பையும் போட்டு நடிப்பதாலும் இயக்குநர் வைக்கும் டுவிஸ்ட்டினாலும் மக்கள் மத்தியில் அதிகளவு ரீச்சை பெற்று வருகிறது.
மேலும் பாக்கியலட்சுமி சீரியல் ஆரம்பத்தில் சாதாரண குடும்ப கதை போன்று சென்றதால் மக்கள் மத்தியில் பெரியளவு ரீச் கிடைக்கவில்லை.
இதன் பின்னர் ராதிகாவை கதையினுள் கொண்டு வந்து இரண்டு குடும்பமாக பிரித்து இயக்குநர் கதையை சுவாரஸ்யப்படுத்தியுள்ளார்.
இதனை தொடரந்து தற்போது எழிலுக்கும், அமிர்தாவிற்கு திருமணம் முடிந்து இருவரும் பாக்கியாவுடன் இருந்து வருகிறார்கள். ஆனாலும் பாட்டி இந்த திருமணத்தை ஏற்றுக் கொள்ளவில்லை.
இவர்களின் காதலுக்கு பாட்டி மட்டுமன்றி செழியனும் எதிர்ப்பு தெரிவித்து வந்த நிலையில் ஜெனியின் பிடிவாதத்தினால் பாக்கியாவுடன் வீட்டில் இருக்கிறார்.
கோபியின் முகத்தில் கரியை பூசிய பாக்கியா
இந்த நிலையில் கோபியின் வீட்டை கோபி ஒரு மாத காலத்தினுள் ஒப்படைக்க வேண்டும் என்று கேட்ட நிலையில், தாத்தாவும் பாட்டியும் சென்று இந்த வீட்டை குடும்பத்திற்காக விட்டுக் கொடுக்குமாறும், இதற்காக தாத்தாவின் சொத்து முழுவதும் எழுதி வைப்பதாகவும் கூறியிருக்கிறார்கள்.
ஆனாலும் கோபியின் பிடிவாதத்தினால் இன்னும் இருபது இலட்சம் ரூபாய் கேட்டுள்ளார். அந்த பணத்தை ஆறு மாதத்திற்குள் தருவதாகவும் பாக்கியா கூறியிருந்தார்.
இந்த வாக்கிற்கினங்க முன் பணமாக ரூபாய் இரண்டு இலட்சம் ரூபாய் கோபியை வரவழைத்து கொடுத்துள்ளார். இந்த டுவிஸ்ட்டை வீட்டிலுள்ள யாரும் எதிர்பார்க்காத நிலையில், அனைவரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்ற நிலையில், “ கோபிக்கு இதனை தொடர்ந்து அடுத்தடுத்து அடி காத்திருக்கிறது” என கமண்ட் செய்து வருகிறார்கள்.