கிராமத்து ஸ்டைலில் அரைத்து வைத்த மீன்குழம்பு.... எப்படி வைக்கிறதுனு தெரியுமா?
கிராமத்து ஸ்டைலில் அரைத்து வைத்து மீன் குழம்பு எவ்வாறு செய்வது என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக கடல்வகை உணவுகள் என்றால் அசைவ பிரியர்களுக்கு அதிகமாகவே பிடிக்கும். அதிலும் மீன் வகைகள் அலாதி பிரியமாகவே இருக்கும்.
கிராமத்து ஸ்டைலில் மசாலா அரைத்து மீன் குழம்பு செய்றதைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
மீன் - 1 கிலோ
சின்னவெங்காயம் - அரை கப்
இஞ்சி பூண்டு பேஸ்ட் - அரை டீஸ்பூன்
புளி - எலுமிச்சை அளவு
மிளகாய் - 2
மஞ்சள் தூள் - கால் டீஸ்பூன்
காஸ்மீர் மிளகாய் பொடி - அரை ஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1 டீஸ்பூன்
வெந்தயம் - அரை டீஸ்பூன்
தாளிப்பு வடகம் - ஒன்றரை டீஸ்பூன்
கறிவேப்பிலை - 5 கொத்து
மசாலா அரைப்பதற்கு
சின்ன வெங்காயம் - 15
பூண்டு - 7 பல்
தக்காளி - 1
கறிவேப்பிலை - 1 கொத்து
சீரகம் - 1 டீஸ்பூன்
பெருஞ்சீரகம் - 1 தேக்கரண்டி
மிளகு - ஒரு ஸ்பூன்
மிளகாய் தூள் - ஒன்றரை டீஸ்பூன்
கொத்தமல்லி தூள் - இரண்டரை டீஸ்பூன்
துருவிய தேங்காய் - அரை கப்
செய்முறை
மண் சட்டி ஒன்றினை அடுப்பில் வைத்த அதில் எண்ணெய் சேர்த்து, சின்ன வெங்காயம், பூண்டு பல் சேர்த்து வதக்கவும்.
ஒரளவு வதங்கிய பின்பு சீரகம் மற்றும் பெருஞ்சீரகம், மிளகு இவற்றினை சேர்த்து வதக்கவும். பின்பு மிளகாய் பொடி, தனியா பொடி சேர்த்து வதக்கவும்.
பின்பு தக்காளி தக்காளி சேர்த்து வதக்கவும். கடைசியாக தேங்காய் சேர்த்து வதக்கி ஆர வைத்து அரைக்கவும்.
மண்சட்டியில் அரைத்த விழுது, பின்பு புளி கரைசல், உப்பு இவற்றினை சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும். பின்பு தாளிப்பதற்கு மீண்டும் ஒரு மண்சட்டியினை அடுப்பில் வைத்து, கடுகு, வெந்தயம், வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
தொடர்ந்து இஞ்சி பூண்டு பேஸ்ட், பச்சை மிளகாய் சேர்த்து நன்றாக வதக்கவும். பின்பு மஞ்சள் பொடி, காஷ்மீர் மிளகாய் பொடி சேர்த்து நன்றாக வதக்கவும்.
பின்பு கரைத்து வைத்திருக்கும் மசாலாவை சேர்த்து நன்றாக 10 நிமிடம் கொதிக்க விடவும். பின்பு மீன் துண்டுகளை சேர்த்து ஒரு 7 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கவும்.
தேவையெனில் மீன் துண்டுகளை சேர்க்கும் போது மாங்காய் கூட சேர்த்துக் கொள்ளலாம். கடைசியாக தாளிப்பதற்கு வைத்திருக்கும் தாளிப்பு வடக்கத்தை வைத்து தாளித்து இறக்கினால், அரைத்து வைத்த மீன் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |