கிராமத்து ஸ்டைல் வெங்காய சட்னி- இலகுவாக செய்வது எப்படி?
தினமும் காலையில் இட்லி, தோசை செய்பவர்களுக்கு அதற்கு சைடு டிஷ் என்ன செய்வது என முடிவெடுப்பது பெரிய வேலையாக இருக்கும்.
அப்படியான குழப்பத்தில் இருப்பவர்கள் சட்னியை வெவ்வேறு விதங்களில் செய்து கொடுக்கலாம்.
சட்னி செய்வதற்கு பெரிதாக நேரமும் போகாது. அந்த வகையில் இட்லி, தோசைக்கு கிராமத்து ஸ்டைல் வெங்காய சட்னி செய்து கொடுக்கலாம்.
இதனை சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
அப்படியாயின் கமகம வாசனையுடன் எப்படி சட்னி செய்யலாம் என்பதனை தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* பூண்டு - 5- பல்
* சின்ன வெங்காயம் - 20
* வரமிளகாய் - 4
* புளி - சிறிய துண்டு
* கறிவேப்பிலை - சிறிது
* கொத்தமல்லி - சிறிது
* உப்பு - சுவைக்கேற்ப
* தணணீர் - தேவையான அளவு
தாளிப்பதற்கு தேவையான பொருட்கள்
* எண்ணெய் - 2 டீஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றவும். அது சூடானதும் பூண்டு, சின்ன வெங்காயம், வரமிளகாய், புளி, ஆகிய பொருட்களை ஒன்று பின் ஒன்று சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வதங்கி வரும் போது கறிவேப்பிலை, கொத்தமல்லி போட்டு கிளறி விட்டு இறக்கவும்.
வதங்கியவை குளிர்ந்த பின்னர் சுத்தமான மிக்ஸி ஜார் அல்லது அம்மி கல்லில் வைத்து உப்பு சேர்த்து அரைக்கவும்.
அரைத்த சட்னியை ஒரு கிண்ணத்தில் ஊற்றி தாளிப்பு சேர்த்து கிளறி விடவும்.
இந்த ரெசிபியை சரியாக செய்தால் சுவையான கிராமத்து ஸ்டைல் வெங்காய சட்னி தயார்!
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |