Bitter Gourd Kulambu: பாகற்காயில் இப்படி குழப்பு செய்து சாப்பிடுங்க... கசப்பே தெரியாதாம்
கசப்பில்லாமல் ருசியான சுவையில் பாகற்காய் குழம்பு செய்வது எப்படி என்று இங்கு தெரிந்து கொள்ளுங்கள்.
பாகற்காய் என்றாலே அதிகமாய யாரும் விரும்பி சாப்பிட மாட்டார்கள். குழந்தைகளைப் போன்றே பெரியவர்களும் அதன் கசப்பு தன்மையை நினைத்து ஒதுக்கி வைத்துவிடுவார்கள்.
ஆனால் பாகற்காய் சாப்பிடுவதால் பல நன்மைகள் நமது உடம்பிற்கு ஏற்படுகின்றது. அதாவது பாகற்காய் வயிற்றில் உள்ள புழுக்களை அளிப்பதுடன், குடலுக்கும் ஆரோக்கியத்தை கொடுக்கின்றது.
கசப்பே இல்லாத பாகற்காய் குழம்பினை எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பாகற்காய் - 200 கிராம்
புளி - சிறிதளவு
கடுகு - 1 ஸ்பூன்
பெரிய வெங்காயம் - 2 (பொடியாக நறுக்கியது)
தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
பூண்டு - 15 (பொடியாக நறுக்கியது)
மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
மல்லி தூள் - 2 ஸ்பூன்
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
வெல்லம் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு - சுவைக்கு ஏற்ப
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - சிறிதளவு
image: sangskitchen
செய்முறை
முதலில் பாகற்காயை பொடியாக வெட்டி பாத்திரம் ஒன்றில் போட்டு, அதில் மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கிளறி 15 நிமிடம் வைத்துவிடவும். புளியையும் ஊற வைத்து அதன் கரைசலை எடுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் பாகற்காய் சேர்த்து நன்றாக வதக்கி தட்டில் தனியாக எடுத்து வைக்கவும்.
பின்பு அதே கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, கறிவேப்பிலை போட்டு தாளித்து, அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு ஆகியவற்றை போட்டு நன்கு வதக்கி, தொடர்ந்து அதனுடன் தக்காளியையும் சேர்த்து வதக்கவும்.
இதனுடன் வதக்கி வைத்துள்ள பாகற்காய் சேர்த்து ஒரு கிளறிவிட்டு, அதில் மிளகாய் தூள், மல்லித் தூள், மஞ்சள் தூள், தேவையான உப்பு சேர்த்து கிளறவும்.
அடுத்து அதில் புளி சாற்றை சேர்த்து சுமார் 10 நிமிடம் கொதிக்க வைத்து, கடைசியாக சிறிதளவு வெல்லத்தையும் சேர்த்து 2 நிமிடம் கொதிக்க வைக்க வேண்டும்.
தற்போது கசப்பில்லாமல் ருசியான பாகற்காய் குழம்பு ரெடி. சூடான சாதத்திற்கு இந்த குழம்பு ஊற்றி சாப்பிட்டால் சுவை அருமையாக இருக்கும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |