மட்டன் குழம்பை மிஞ்சும் சுவையில் பட்டர் பீன்ஸ் குழம்பு எப்படி செய்வது?
மட்டன் சுவையை மிஞ்சும் ஸ்டைலில் பட்டர் பீன்ஸ் குழம்பு எவ்வாறு செய்யலாம் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக வீட்டில் சமைக்கும் நேரம் வந்துவிட்டால், என்ன சமைப்பது என்ற குழப்பம் அதிகமாகவே இருக்கும். அதிலும் அசைவ பிரியர்களுக்கு சைவ சாப்பாடு என்றாலே சற்று முகம் சுழிக்கவே செய்வார்கள்.
இங்கு வெறும் பட்டர் பீன்ஸ் மட்டும் வைத்து மட்டன் குழம்பு ஸ்டைலில் எவ்வாறு சமைப்பது என்பதை இந்த பதிவில் தொடர்ந்து தெரிந்து கொள்வோம்.
தேவையான பொருட்கள்
பட்டர் பீன்ஸ் - 1 கப்
தேங்காய் பால் - 1 கப்
சின்ன வெங்காயம் - 15
தக்காளி - 1 (பொடியாக நறுக்கியது)
மஞ்சள் தூள் - 1/4 ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 ஸ்பூன்
கரம் மசாலாத்தூள் - 3/4 ஸ்பூன்
குழம்பு பொடி - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
தண்ணீர் - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
கடுகு - 1ஸ்பூன்
சோம்பு - அரை ஸ்பூன்
கசகச- அரை ஸ்பீன்
பூண்டு - 7 பல்
கொத்தமல்லி இலை - சிறிதளவு (பொடியாக நறுக்கியது)
செய்முறை
பட்டர் பீன்ஸை குக்கரில் போட்டு மஞ்சள் தூள் தேவையான உப்பு, தேவையான அளவு தண்ணீர் ஊற்றி வேக வைத்துக் கொள்ளவும்.
வேக வைத்த பட்டர் பீன்ஸை தனியாக பாத்திரம் ஒன்றில் எடுத்து வைத்துக்கொள்ளவும். பின்பு கடாய் ஒன்றினை அடுப்பில் வைத்து அதில் எண்ணெய் ஊற்றி சூடான பின்பு எண்ணெய் ஊற்றி கடுகு, சோம்பு போட்டு தாளிக்கவும்.
PHOTO BY BRIAN HOLLE
பின்பு வெங்காயம் பூண்டு சேர்த்து நன்கு வதக்கிய பின்பு தக்காளியையும் சேர்த்து வதக்கிவிட்டு, அதனுடன் கரம்மசாலா, மிளகாய் தூள் ஆகியவற்றை சேர்க்கவும்.
பட்டர் பீன்ஸை தண்ணியுடன் சேர்த்து கொதிக்க வைக்கவும். கசகச சேர்த்து தேங்காயை மிக்ஸியில் அரைத்து அதன் பாலை சேர்த்து ஒரு கொதி வந்ததும் இறக்கிவிடவும். தற்போது சுவையான பட்டர் பீன்ஸ் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |