கிராமத்து ஸ்டைலில் சுவையான நெத்திலி மீன் குழம்பு! சுலபமாக தயார் செய்வது எப்படி?
இன்றைய அசைவ பிரியர்களின் உணவில் முதல் இடத்தில் இருப்பது மீன் வகைகளே! அதிலும் மீன் குழம்பு என்றாலே இரண்டு அல்லது மூன்று நாட்கள் வைத்து சாப்பிட அவ்வளவு ருசியாகவே இருக்கும்.
தற்போது கிராமத்து ஸ்டைலில் நெத்திலி மீன் குழம்பு எவ்வாறு வைப்பது என்பதை தெரிந்து கொள்ளலாம்.
தேவையான பொருட்கள்:
நெத்திலி மீன் – 1/4 கிலோ
பெரிய வெங்காயம் – 2
தக்காளி – 2
பூண்டு – 6
மஞ்சள் தூள் – 1/4 ஸ்பூன்
நல்லெண்ணெய் – தேவையான அளவு
மிளகாய் தூள் – 2 ஸ்பூன்
இஞ்சி– சிறிதளவு
தனியா தூள் – 2 ஸ்பூன்
பச்சை மிளகாய் – 2
புளி – பெரிய நெல்லிக்காய் அளவு
கடுகு – சிறிதளவு
கறிவேப்பிலை – சிறிதளவு
செய்முறை
முதலில் மீனை சுத்தம் செய்து வைத்துக்கொண்டு, பின்பு வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கி வைக்கவேண்டும். புளியை கரைத்தும், இஞ்சியை விழுதாக அரைத்தும் வைத்துக் கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் காய்ந்ததும், கடுகு, வெந்தயம், சோம்பு போட்டு தாளித்து நறுக்கிய வெங்காயம், பூண்டு, இஞ்சி விழுதை சேர்த்து நன்கு வதக்கவும். பின்பு தக்காளி, பச்சை மிளகாயை சேர்த்து நன்றாக வதக்கவும்.
இவை அனைத்தும் நன்கு வெந்ததும், மஞ்சள், மிளகாய், மற்றும் தனியா தூள்களை சேர்த்த சிறிது நேரத்தில், புளி கரைசலை ஊற்றவும். தேவையான அளவு உப்பு மற்றும் தேவைக்கு ஏற்ப தேங்காய் பால் இவற்றினை சேர்த்து கொதிக்க விடவும்.
சற்று கட்டியாக வந்த பின்பு சுத்தம் செய்து வைத்துள்ள மீனை சேர்க்கவும். அடுப்பு தீயை மிதமாக வைத்து மீன் வெந்ததும் மல்லிதழை தூவி இறக்கவும். சுவையான நெத்திலி மீன் தயார்.