சுள்ளுன்னு ஆளை இழுக்கும் மீன் குழம்பு - சட்டியில் செய்து ருசியுங்கள்….சுவை அள்ளும்!
மீன் குழம்பு சட்டியில் செய்து அசத்துவது எப்படி?
தேவையான பொருட்கள்
- 6 வஞ்சரம் மீன் அல்லது உங்களுக்கு பிடித்த மீன் துண்டுகள்
- சின்ன வெங்காயம் – 100கிராம்
- 4 தக்காளி
- 15 பல்
- பூண்டு புளி கரைசல் தேவையான அளவு
- சாம்பார் பொடி 1 ஸ்பூன்
- மஞ்சள்தூள் 1
- ஸ்பூன் மிளகாய்த்தூள் 1
- சீரகத்தூள் 1 ஸ்பூன்
- 100 மில்லி
- நல்லெண்ணெய் 1/2 ஸ்பூன்
- சோம்பு 1/2 ஸ்பூன்
- சீரகம் 1/4 ஸ்பூன்
- வெந்தயம் ஒரு கொத்து
- கரு வேப்பிலை சிறிதளவு
- கொத்தமல்லி (பொடியாக நறுக்கிய)
செய்முறை
மீன் துண்டுகளில் உப்பு மற்றும் மஞ்சள் தூள் கலந்து சுமார் 10 நிமிடங்கள் வரை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்.
பின்பு அடுப்பில் மண் சட்டி வைத்து அதில் சிறிது நல்லெண்ணெய்யை ஊற்ற வேண்டும். எண்ணெய் காய்ந்த பின்பு வெந்தயம் , சோம்பு , சீரகம் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்கவும்.
அதன் பிறகு பூண்டு , பொடியாக நறுக்கிய சின்ன வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். மேலும் அதில் சீரகத்தூளை நன்றாக கலக்கி விட வேண்டும்.
5 ன் நிமிடங்கள் கழித்து பொடியாக நறுக்கிய தக்காளி, சாம்பார் பொடி , மிளகாய் தூள் , தேவையான அளவு தண்ணீர், மற்றும் புளிக்கரைசல் ஆகியவை சேர்த்து 20 நிமிடங்கள் கொதிக்க விட வேண்டும்.
இதில் இப்போது ஊற வைத்துள்ள மீன் துண்டுகளை சேர்த்து கொள்ள வேண்டும் .அடுப்பை மிதமான தீயில் வைத்து ஐந்து நிமிடங்கள் வரை மீனை வேக வைத்துக் கொள்ள வேண்டும். மீன் வெந்து விட்டால் மணமணக்கும் வாசனை வரும்.
இதனுடன் சிறிதளவு நறுக்கிய கொத்தமல்லி தழை மற்றும் சிறிது கருவேப்பிலை சேர்த்தால் அவ்ளோதாங்க ஆளை சுண்டி இழுக்கும் சட்டி மீன் குழம்பு ரெடி !