கிராமத்து பாணியில் நெத்திலி மீன் குழம்பு... இப்படி செய்து பாருங்க சுவை அட்டகாசமாக இருக்கும்!
பொதுவாக நாம் எல்லோருக்கும் நெத்திலி மீன் குழப்பு மிகவும் பிடிக்கும். அதுவும் கிராம புறங்களில் செய்யப்படும் குழம்பு என்றால் சொல்லும் போதே நாவில் எச்சில் ஊற ஆரம்பித்துவிடும்.
அதிலும் நெத்திலி மீன் குழப்பு என்றாலே அதன் வாசனையும் சுவையும் அட்டகாசமாக இருக்கும். இந்த நெத்திலி மீன் குழம்பை மண் சட்டியை பயன்படுத்தி கிராமத்து பாணியில் எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
நெத்திலி மீன்
மிளகாய்த் தூள்
தக்காளி
சின்ன வெங்காயம்
பச்சை மிளகாய்
இஞ்சி
பூண்டு
தனியா தூள்
தேங்காய் பால்
கடுகு வெந்தயம்
எண்ணெய்
கொத்தமல்லி
உப்பு
சோம்பு
புளி
செய்முறை
முதலில் இஞ்சி மற்றும் பூண்டு ஆகியவற்றை சுத்தம் செய்து அம்மியை பயன்படுத்தி நன்றாக அரைத்து எடுத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி, எண்ணெய் சூடானதும் கடுகு, வெந்தயம், சோம்பு ஆகியவற்றை சேர்த்து நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயம், இஞ்சி பூண்டு விழுது சேர்த்து நன்றாக வதக்கி,இதனுடன் தக்காளி மற்றும் பச்சை மிளகாய் சேர்த்து பச்சை வாசனை போகும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும்.
பின்னர் மஞ்சள் தூள், மிளகாய்த்தூள் மற்றும் தனியா தூள் சேர்த்து நன்றாக தக்காளி வதங்கியதும் கரைத்த புளியை ஊற்றி நன்றாக கிளறிவிட வேண்டும்.
அதனையடுத்து தேவையான அளவு உப்பு சேர்த்து, சிறிதளவு தேங்காய்ப்பால் சேர்த்து நன்றாக 5 நிமிடங்கள் வரையில் கொதிக்கவிட வேண்டும்.
இறுதியில் மீனை சேர்த்து மிதமான தீயில் வைத்து லேசாக கொதி வந்ததும் இறக்கினால், அட்டகாசமான சுவையில் நெத்திலி மீன் குழம்பு தயார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |