ஆந்திரா பாணியில் தக்காளி பருப்பு குழம்பு... அசத்தல் சுவையில் எப்படி செய்வது?

Tomato Healthy Food Recipes
By Vinoja Jul 26, 2024 01:08 PM GMT
Report

மதியம் சாதத்துடன் சாப்பிடுவதற்கு வழக்கமான பருப்பு குழம்பு போல் இல்லாமல், மிகவும் எளிமையாக முறையில் ஆந்திரா பாணியில் தக்காளி பருப்பு குழம்பு எப்படி செய்யலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.

பருப்பில் அதிகளலு புரதமும் தக்காளியில் வைட்டமின் சி அதிகளவில் இருப்பதால் வாரம் ஒரு முறையாவது இந்த குழம்பை உணவில் சேர்த்துக்கொள்வது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்துவதில் பெரும் பங்கு வகிக்கின்றது. 

ஆந்திரா பாணியில் தக்காளி பருப்பு குழம்பு... அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Andhra Thakkali Paruppu Kuzhambu Recipe In Tamil

தேவையான பொருட்கள்

ஆரோக்கியமாகவும் ஈஸியாகவும் தக்காளி குழம்பு செய்யணுமா? அப்போ இந்த முறையை செய்ங்க

ஆரோக்கியமாகவும் ஈஸியாகவும் தக்காளி குழம்பு செய்யணுமா? அப்போ இந்த முறையை செய்ங்க


துவரம் பருப்பு - 100 கிராம்

தக்காளி - 4

மஞ்சள் தூள் - 1/4 தே.கரண்டி 

மிளகாய் தூள் - 1 தே.கரண்டி

தண்ணீர் - 1/2 லிட்டர்

எண்ணெய் - சிறிது

புளி - சிறிய நெல்லிக்காய் அளவு

எண்ணெய் - 2 தே.கரண்டி

கடுகு - 1 தே.கரண்டி

கடலைப் பருப்பு - 1/4 தே.கரண்டி

சீரகம் - 1/2 தே.கரண்டி

வரமிளகாய் - 2

கறிவேப்பிலை - 1 கொத்து

வெங்காயம் - 1

பூண்டு - 10 பல்

பச்சை மிளகாய் - 1 (பொடியாக நறுக்கியது)

உப்பு - தேவையான அளவு 

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

கொத்தமல்லி - சிறிதளவு 

ஆந்திரா பாணியில் தக்காளி பருப்பு குழம்பு... அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Andhra Thakkali Paruppu Kuzhambu Recipe In Tamil

செய்முறை

முதலில் துவரம் பருப்பை நன்றாக  கழுவி சுத்தம் செய்து குக்கரில் போட்டுக்கொள்ள வேண்டும். 

அதன் பின்னர் புளியை ஊறவைத்து கெட்டியாக சாறு எடுத்து ஒரு கிண்ணத்தில் தனியாக வைத்துக்கொள்ள வேண்டும். 

பின்னர் துவரம் பருப்புடன் தக்காளி, மஞ்சள் தூள், மிளகாய் தூள், சிறிது எண்ணெய் மற்றும் நீரை ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 விசில் வரும் வலையில் வேகவிட்டு இறக்கி குளிரவிட வேண்டும். ஆறியதன் பின்னர் குக்கரை திறந்து மத்து கொண்டு  லேசாக மசித்துவிட வேண்டும். 

ஆந்திரா பாணியில் தக்காளி பருப்பு குழம்பு... அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Andhra Thakkali Paruppu Kuzhambu Recipe In Tamil

பின்னர் ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, கடலைப் பருப்பு சீரகம், வரமிளகாய், கறிவேப்பிலை ஆகியவற்றை சேர்த்து தாளித்துக்கொள்ள வேண்டும். 

அதனையடுத்து  பொடியாக நறுக்கிய வெங்காயம் மற்றும் பூண்டு சேர்த்து வெங்காயம் பொன்நிறமாக மாறும் வரையில் நன்றாக வதக்கிக்கொள்ள வேண்டும். 

ஆந்திரா பாணியில் தக்காளி பருப்பு குழம்பு... அசத்தல் சுவையில் எப்படி செய்வது? | Andhra Thakkali Paruppu Kuzhambu Recipe In Tamil

பின்னர் அதனுடன்  பொடியாக நறுக்கிய பச்சை மிளகாயை சேர்த்து ஒரு நிமிடம் வரையில் வதக்கிவிட்டு, அடுதனுடன் வேக வைத்து மசித்து வைத்துள்ள பருப்பை ஊற்றி, பெருங்காயத் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க விட்டு கொத்தமல்லியைத் தூவி இறக்கினால்  ஆந்திரா பாணியில் சுவையான தக்காளி பருப்பு குழம்பு தயார். 

காலையில் உங்க முகம் பொலிவாக இருக்கணுமா? அப்போ இரவில் கட்டாயம் இந்த உணவை சாப்பிடுங்க

காலையில் உங்க முகம் பொலிவாக இருக்கணுமா? அப்போ இரவில் கட்டாயம் இந்த உணவை சாப்பிடுங்க


சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

வடலியடைப்பு, Holland, Netherlands

03 Jul, 2025
13ம் ஆண்டு நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

தையிட்டி, பிரான்ஸ், France

23 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், கொழும்பு

24 Jun, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

சண்டிலிப்பாய், கொழும்பு, பரிஸ், France, சிட்னி, Australia

25 Jun, 2021
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், பரிஸ், France, London, United Kingdom

14 Jun, 2026
மரண அறிவித்தல்

நயினாதீவு 8ம் வட்டாரம், Bürstadt, Germany

21 Jun, 2026
மரண அறிவித்தல்

நெல்லியடி நவிண்டில், Neuenrade, Dortmund, Germany

19 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

உடுவில், கொழும்பு, Melbourne, Australia, சிங்கப்பூர், Singapore, Kuala Lumpur, Malaysia, Chennai, India, வவுனியா

26 May, 2026
மரண அறிவித்தல்

புளியங்கூடல், யாழ்ப்பாணம்

21 Jun, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆவரங்கால், Scarborough, Canada

22 Jun, 2022
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

வேலணை, தொல்புரம், Markham, Canada

19 Jun, 2026
15ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், பிரித்தானியா, United Kingdom

22 Jun, 2011
4ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், Walthamstow, United Kingdom

23 Jun, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, எசன், Germany

21 Jun, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை 1ம் வட்டாரம், வெள்ளவத்தை

19 Jun, 2023
16ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US