தினமும் முட்டை ஏன் கட்டாயம் சாப்பிட வேண்டும்?
தினமும் முட்டை எடுத்துக் கொள்வதால் என்னென்ன பயன்கள் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
முட்டை
அசைவ பிரியர்களின் பட்டியலில் அதிகமான இடம் முட்டை இருக்கின்றது. முட்டையை பல விதங்களில் சமைத்து சாப்பிட்டு வருகின்றனர்.
இதில் வைட்டமின் பி அதிகளவு நிறைந்துள்ளதுடன், வைட்டமின் பி12, பயோட்டின், ரிபோஃப்ளேவின், செலினியம் போன்ற சத்துக்களும் உள்ளது.
இதிலுள்ள அத்தியாவசிய ஊட்டச்சத்துக்கள் உடலை ஆரோக்கியமாகவும், வலுவாகவும், சுறுசுறுப்பாகவும் வைக்கின்றது. தினமும் காலையில் முட்டை சாப்பிட்டு வந்தால் பல்வேறு ஆரோக்கிய நன்மையினை பெறலாம்.
முட்டையின் ஆரோக்கிய பயன்கள்
உடம்பை பிட்டாக வைத்துக் கொள்ள நினைப்பவர்கள் தினசரி கண்டிப்பாக முட்டையை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும்.
ஏனெனில் முட்டையில் உள்ள புரதம் தசைகளின் வலிமைக்கு அதிகம் உதவுவதுடன், ஆரோக்கியத்திற்கும் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
மேலும் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும், தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்கவும் உதவுகிறது.
முட்டையில் உள்ள லுடீன் மூளை வளர்ச்சியை அதிகப்படுத்தி, நினைவாற்றலை கூர்மைப்படுத்துவதுடன், எலும்புகளை வலுப்படுத்தவும், நல்ல கண்பார்வையையும் அளிக்கின்றது.
இதய நோய்களை குறைத்து, மன ஆரோக்கியத்தையும் மேம்படுத்துவதுடன், உடல் எடையைக் குறைக்க நினைப்பவர்களும் தாராளமாக முட்டை சாப்பிட்டு வரலாம்.
முட்டைகள் உடலில் நல்ல கொலஸ்ட்ராலின் அளவை அதிகரிக்க செய்கின்றன. தொடர்ந்து 6 வாரங்களுக்கு தினமும் இரண்டு முட்டைகளை சாப்பிட்டு வந்தால் HDL அளவை 10 சதவிகிதம் அதிகரிக்க வழிவகுக்கும்.
மீன், நட்ஸ் போன்ற உயர்தர உணவுகளில் கிடைக்கும் சத்துக்கள் முட்டை சாப்பிடுவதன் மூலமும் கிடைக்கின்றன.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |