கோட் சூட் போட்டு வெள்ளித்திரை வரைக்கும் மாஸ் காட்டும் பிக்பாஸ் பிரபலம்! வைரலாகும் போட்டோ ஷீட்
பிக்பாஸ் சீசன் 6 முக்கிய போட்டியாளராக இருந்த விக்ரமன் அசல் வில்லன் போல் இருக்கும் புகைப்படங்களை இணையத்தில் பகிர்ந்து ரசிகர்களை வியப்படைய வைத்துள்ளார்.
பிக்பாஸ் விக்ரமன்
பிரபல தொலைக்காட்சியில் மிகவும் விறுவிறுப்பாக செல்லும் ரியாலிட்டி ஷோ தான் பிக்பாஸ்.
இந்த நிகழ்ச்சியில் தற்போது ஆறாவது சீசன் நிறைவடைந்துள்ளதுடன் ஏழாவது சீசன் எப்போது ஆரம்பமாகும் என எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், பிக் பாஸ் சீசன் 6 முக்கிய போட்டியாளராக இருந்தவர் தான் விக்ரமன். இவர் ஒரு அரசியல்வாதியாக இருந்து இந்த ஷோவிற்கு வருகை தந்திருந்தார்.
பிக் பாஸ் வீட்டில் மிகவும் அன்பானவராகவும் பண்பானவராகவும் இருந்தவர் தான் விக்ரமன். பிக் பாஸ் சீசன் 6 ன் டைட்டில் வின்னர் என பேசப்பட்டார்.
ஆனாலும் இவரின் சில துரதிஷ்டங்கள் காரணமாக இவருக்கு டைட்டில் வின்னர் கிடைக்கவில்லை.
அசீமிற்கு போட்டியாக களத்தில் குதித்த விக்ரமன்
இந்த நிலையில், தற்போது கோட் சூட்டுடன் புகைப்படங்களை போட்டோ ஷீட் எடுத்து வெளியிட்டுள்ளார். இதில் பார்க்கும் போது அசல் வெள்ளித்திரை வில்லன் போல் இருக்கிறார்.
இவர் ஆரம்பத்தில் சினிமாவில் சில கதாபாத்திரங்கள் நடித்திருந்தாலும், தற்போது சினிமாவில் ஏதாவது செய்யலாம் என விக்ரமனின் ரசிகர்கள் முனுமுனுத்து வருகிறார்கள்.
இவர் பல கூட்டங்களுக்கு சென்று பலதரப்பட்ட விடயங்களை பேசுவதால் இவருக்கு மக்கள் மத்தியில் ஒரு நல்ல பெயர் இருக்கிறது.
இவரின் இந்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறதுடன், “ இவரின் அலும்பல் வர வர தாங்க முடியவில்லை.” எனவும் கருத்துக்களை பதிவு செய்து வருகிறார்கள்.