விக்ரமனுக்கு அசீம் கொடுத்த பதிலடி! பிக்பாஸ் மேடையை ஆரவாரப்படுத்திய ரசிகர்கள்
பிக்பாஸ் வீட்டில் இன்றைய தினம் அசீம் கொடுத்த பதிலடி ரசிகர்களை ஆரவாரப்படுத்தியுள்ளது.
பிக்பாஸ் நிகழ்ச்சி
பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில ஆண்டுகளாக பிரபல தொலைக்காட்சியில் டிஆர்பி ரேட்டிங்கில் முதலிடத்தில் செல்லும் நிகழ்ச்சியாக பார்க்கப்படுகிறது.
மேலும் மக்கள் மத்தியில் இந்நிகழ்ச்சிக்கென தனி சிறப்பும் இருக்கிறது. இதில் கலந்துக் கொள்ளும் போட்டியாளர்கள் அணைவரும் நாம் சின்னத்திரை மற்றும் தொலைக்காட்சியில் வரும் பிரலங்களாகவே தெரிவு செய்யப்படுவார்கள்.
அந்த வகையில் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் சீசன் 6 விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது.
இதில் ஆரம்பத்தில் சுமார் 21 போட்டியாளர்கள் களமிறங்கினார்கள்.
அசிமின் கணிப்பு
மேலும் தற்போது 8 போட்டியாளர்கள் வெளியேறிய நிலையில் ஒன்பதாவது வாரத்திற்கு சுமார் 13 போட்டியாளர்கள் செல்லவிருக்கிறார்கள்.
இந்நிலையில் போட்டியாளர்கள் செய்யும் வேலைகளை வாரத்தில் இறுதி நாளான இன்று பிக் பாஸ் தொகுப்பாளர் கமல் அவர்கள் புட்டு புட்டு வைத்தார்.
இதில் “மக்கள் மத்தியில் யார் பிரபலமாகயிருப்பார்” என கமல் கேட்டபோது அசீம் மக்கள் மத்தியில் குறைவாக மதிப்பிட்டவராக இருப்பார் என விக்ரமன் கூறியுள்ளார்.
இவையனைத்திற்கும் பதிலடிக் கொடுக்கும் விதமாக அசீம்,“ இது உண்மையாக இருக்க வாய்ப்பில்லையென்று பதிலளித்துள்ளார்.
இவரின் பதிலை கேட்டதும் மக்கள் அணைத்தும் ஆரவாரத்துடன் கைத்தட்டியுள்ளனர்.
அந்த வகையில் இன்றைய நாளுக்கான மூன்றாவது ப்ரோமோ வெளிவந்துள்ளது.
#Day56 #Promo3 of #BiggBossTamil #BiggBossTamil6 - இன்று இரவு 9:30 மணிக்கு நம்ம விஜய் டிவில.. #BBTamilSeason6 #BiggBoss #பிக்பாஸ் #VijayTelevision @preethiIndia @NipponIndia pic.twitter.com/TDlmUW8ISa
— Vijay Television (@vijaytelevision) December 4, 2022