கோட் சூட்டுடன் காரில் வந்திறங்கி சீன் போட்ட குரங்கு! ஷாக்கான நெட்டிசன்கள்
கோட்சூட் போட்டு காரில் வந்த குரங்கின் சேட்டை வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
விலங்குகளின் வீடியோக்கள்
தற்போது சமூக வலைத்தளப்பக்கம் சென்றாலே விலங்குகளின் வீடியோக்களுக்கு பஞ்சமே இல்லாத அளவு வீடியோக்கள் ஓடிக் கொண்டிருக்கிறது.
விலங்குகளின் வீடியோக்களுக்கென இணையத்தில் ஒரு ரசிகர் பட்டாளமே உள்ளது. இதனால் விலங்குகளின் வீடியோக்கள் அதிக ரீச்சை பயனருக்கு பெற்று தருகிறது.
கோட்சூட்டுடன் வந்திறங்கிய குரங்கு
இதன்படி, குரங்கு ஒன்று வெள்ளை நிற கோட் சூட் அணிந்து வெள்ளை நிற காரில் வந்து இறங்கி வெளியில் வருகிறது.
அப்போது அங்கிருந்தவர் குறித்து குரங்கிற்கு கையை கொடுப்பதற்காக கையை நீண்டுகிறார்கள், அப்போது கைத்தட்டி விட்டு விட்டுகிறது. மேலும் பெணணொருவர் கைக் கொடுக்கும் போது கைக் கொடுக்காமல் திரும்பி அமர்ந்துக் கொள்கிறது.
இதனை பார்த்து கொண்டு நிற்பவர்கள் குரங்கின் செயலை பார்த்து வியந்தது மட்டுமன்றி குரங்கை பார்த்து புன்னகைத்தும் செல்கிறார்கள்.
இதன்போது எடுக்கப்பட்ட வீடியோ காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருவதுடன், இதனை பார்த்த நெட்டிசன்கள், குரங்கின் செயலை பார்த்து வியப்படைந்துள்ளார்கள்.