பிக்பாஸிடம் Beef பிரியாணி கேட்கும் முக்கிய போட்டியாளர்!
பிக் பாஸ் வீட்டில் முக்கிய போட்டியாளராக இருக்கும் விக்ரமன் பிக் பாஸிடம் பிரியாணி கேட்டுள்ளார்.
பிக் பாஸ் வீடு
பிக் பாஸ் சீசன் 6 தற்போது 100 நாட்களை கடந்து 102 நாள் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கிறது. இந்த நிகழ்ச்சியில் சுமார் 21 பிரபலங்கள் கலந்துக் கொண்டார்கள்.
இதில் அரசியல் சார்பாக கலந்துக் கொண்டவர் தான் விக்ரமன். இவரின் ஒரு அரசியல் வாதி என்பதால் பிக் பாஸ் வீட்டில் பல இடங்களில் தனது இருப்பை காண்பித்துள்ளார்.
இதனால் மக்களின் ஆதரவு அதிகமாகியது, இவர் தான் “டைட்டில் வின்னர்” என்றெல்லாம் பேசப்படுகிறது, இவரின் பொறுமை தான் இதற்கு காரணம் என்றும் ரசிகர்கள் கூறியுள்ளார்கள்.
இவர் பிக் பாஸ் வீட்டிலிருக்கும் போட்டியாளர்களுடன் மகேஸ்வரி, சிவின் ஆகிய இரண்டு போட்டியாளர்களுடன் தான் அதிகமாக தன்னுடைய விடயங்களை பகிர்ந்துக் கொள்வார்.
சாப்பாடு கேட்ட போட்டியாளர்
இந்நிலையில் பிக் பாஸ் வீட்டில் நேற்று வைக்கப்பட்டுள்ள சூட்கேஸ் இன்று வரை இருக்கிறது. இதனை யார் எடுப்பார்கள் என்பது இன்னும் ஒரு புரியாத புதிராகவே இருக்கிறது.
இதனை தொடர்ந்து சிவின் இதனை எடுப்பார் என ரசிகர்கள் ஒரு தகவலை பரப்பி வருகிறார்கள். ஆனால் அதற்கான அறிகுறிகள் பெரிதாக தெரியவில்லை.
இதற்கிடையே விக்ரமன் பிக் பாஸிடம் சென்று எனக்கு ஒரு beef பிரியாணி வேண்டும் என்று கூறியுள்ளார். இதற்கு தொட்டுக் கொள்வதற்கு பச்சடி, கத்தரிக்காய், பொரியல் எல்லாம் கேட்டுள்ளார்.
@RVikraman யோசிக்கும்போதே நினைச்சேன்.. #BeefBriyani தான் கேட்பாருன்னு. சங்கிகளை கதறவிடுறதுல தலைவனை அடிச்சுக்க ஆள் இல்ல... #VaathiVikraman #AramVellum #Vikraman #VaathiVikraman #vikramantitlewinner #Vikku #BiggBossTamil6 #BiggBossTamil #BiggBoss pic.twitter.com/P8KtXGKX0m
— Magizh Amudhan (@Amuthan1015) January 17, 2023
இந்த வீடியோக்காட்சியை நெட்டிசன்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாக்கி வருகிறார்கள்.