ஆதித்த கரிகாலனுக்கு கிடைத்த ரெஸ்பான்ஸ்! விக்ரம் நெகிழ்ச்சி பதிவு
பொன்னியின் செல்வன் திரைக்கு வந்து சில தினங்களிலே மக்களிடையே பெறும் வரவேற்பை பெற்ற நிலையில், இது தொடர்பிலான விக்ரமின் டுவிட்டர் பதிவு நெகிழ்ச்சியடைய வைக்கிறது.
கடந்த 30ஆம் திகதி விக்ரம், கார்த்தி, ஜெயம்ரவி நடிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மானின் இசையில் வெளியான பிரமாண்ட திரைப்படம் மக்கள் மத்தியில் பெறும் வரவேற்பை பெற்று ஒடிக் கொண்டிருக்கிறது.
விக்ரமின் டுவிட்டர் பதிவு

இந்நிலையில் விக்ரம் அவரது டுவிட்டர் பக்கத்தில், “பொன்னியின் செல்வன் படத்துக்கு கிடைத்த வரவேற்புக்கு நன்றி, இதில் வரும் ஆதித்த கரிகாலனுக்கு கிடைத்த ஆக்ரோஷமான பீட்பேக் அனைத்துக்கும் நன்றி, நான் நிறைய படங்கள் செய்துள்ளேன். நான் எப்போதும் எனது படங்கள் குறித்தும், எனது கேரக்டர் குறித்தும் பெருமைப் படுவதே இல்லை. ஆனால் இளைஞர்கள், பொதுமக்கள், விமர்சகர்கள், பத்திரிகைகள் என எல்லோருமே கொண்டாடும் படமாக ‘பொன்னியின் செல்வன்’உள்ளது இது குறித்து சந்தோஷம் அடைகிறேன்” என தெரிவித்துள்ளார்.
விக்ரமனின் இந்த பதிவு ரசிகர்களை நெகிழ்ச்சியடைய வைக்கிறது. இந்நிலையில் பிரபலங்களும் இப்பதிவுக்கு கருத்து தெரிவித்து வருகின்றனர்.
அன்பு இதயங்களுக்கு என் இதய நன்றி. #PonniyanSelvan #ManiRatnam @LycaProductions @arrahman @actor_jayamravi @Karthi_Offl @trishtrashers #AishwaryaRaiBachchan pic.twitter.com/YxJczs44gh
— Aditha Karikalan (@chiyaan) October 1, 2022