பிறந்தநாளில் நண்பனுக்காக கதறிய நடிகர் விக்ரம்
சினிமாவில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தாலும், நிஜவாழ்வில் இளசுகளின் கதாநாயகனாக வலம்வந்தவர் நடிகர் விவேக்.
இவரது மறைவால் இளைஞர்கள் பெரும் சோகத்தில் மூழ்கியுள்ளனர், எனினும் இவரது கனவை நனவாக்க மரக்கன்றுகளை ஆங்காங்கே ரசிகர்கள் நட்டு வருகின்றனர்.
நேற்று விருகம்பாக்கத்தில் வைக்கப்பட்டிருந்த விவேக்கின் உடலுக்கு பொதுமக்கள் உட்பட பல்வேறு பிரபலங்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.
தன்னோட பிறந்த நாளில்
— Dᴀᴠɪᴅ Aᴅᴀᴍ CVF (@Chiyaan_AdamCVF) April 17, 2021
தன் உயிர் நண்பனுக்கு
இறுதி அஞ்சலி செலுத்துற
நிலைமை யாருக்கும்
வரக்கூடாது ?
Despite Of #ChiyaanVikram
Birthday He Came To Attend
Funeral Of #Vivek Sir..!!
Huge Respect #Vikram Sir ?#RIPVivekSir #RIPVivek pic.twitter.com/dIuHdV3z6t
அவர்களில் நடிகர் விக்ரமும் ஒருவர், விக்ரம் மற்றும் விவேக் நடிப்பில் வெளிவந்த அந்நியன் படம் மாபெரும் வெற்றி பெற்றது, நேற்று தன்னுடைய பிறந்தநாள் கொண்டாட்டத்தையும் தவிர்த்துவிட்டு நண்பனுக்காக நேரில் அஞ்சலி செலுத்தியுள்ளார் விக்ரம்.
இதனைதொடர்ந்து விவேக்கிற்காக விக்ரமின் பிறந்தநாளை கொண்டாடப்போவதில்லை என ரசிகர்களும் முடிவு எடுத்தது குறிப்பிடத்தக்கது.
#HappyBirthdayChiyaanVikram #HBDVikram #Vikram sir going to his close funeral on his birthday itself??? pic.twitter.com/5NHkVa0GZR
— THALA(DHONI+PATHY VIJAY) VERIYAN (@adavana1) April 17, 2021