திடீரென துபாய் செல்லும் தேமுதிக தலைவர் விஜயகாந்த்- காரணம் இதுவா? தொண்டர்கள் பிரார்த்தனை
தேமுதிக தலைவர் விஜயகாந்த் தைராய்டு பிரச்சனை, தொண்டையில் தொற்று, சிறுநீரகக் கோளாறு உள்ளிட்ட உடல் நலக் கோளாறுகளால் விஜயகாந்த்தின் ஆரோக்கியம் குன்றியது. அவரது நடை தளர்ந்து பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்க முடியாமல் போனது.
மேலும், தனது உடல் நலக் கோளாறுகளுக்காக சிங்கப்பூரில் உள்ள குயின் எலிசபெத் மருத்துவமனையில் சிகிச்சை எடுத்து வந்தார். இதன்பின்னர், விஜயகாந்த். சென்னையிலும், அமெரிக்காவிலும், சிகிச்சைகளைத் தொடர்ந்து வருகிறார்.
இதன் தொடர்ச்சியாக, விஜயகாந்த் மருத்துவ பரிசோதனைக்காக துபாய் செல்கிறார். லண்டனைச் சேர்ந்த பிரபல மருத்துவர் ஒருவர் அவருக்கு நடைபயிற்சி மற்றும் பேச்சுப் பயிற்சி கொடுப்பதற்காக துபாய் வருகிறார்.
அங்கு விஜயகாந்த்துக்கு மருத்துவப் பரிசோதனை செய்த பின், சிகிச்சையை துபாயில் அளிப்பதா லண்டன் அழைத்துச் செல்வதா என முடிவு செய்யப்பட உள்ளதாக தேமுதிக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.