கேப்டன் இறப்பிற்கு பின்பு மகன் போட்ட முதல் பதிவு
தந்தை விஜயகாந்தின் மறைவிற்கு பின்பு அவரது மகன் வெளியிட்டுள்ள முதல் பதிவு வைரலாகி வருகின்றது.
கேப்டன் விஜயகாந்த்
தேமுதிக கட்சியில் தலைவராகவும், எதிர் கட்சிக்கு சிம்ம சொப்பனமாகவும் இருந்த விஜயகாந்த் கடந்த வியாழக்கிழமை உயிரிழந்த நிலையில், இவரது இறுதி கடந்த வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பல லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் சந்த பேழைக்குள் விதைக்கப்பட்டுள்ள நிலையில், தமிழக மக்களே பெரும் துயரில் ஆழ்ந்துள்ளனர்.
இந்நிலையில் விஜயகாந்தின் மகன் தந்தை இறப்பிற்கு பின்பு முதல் பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
சண்முக பாண்டியன் பதிவு
கேப்டன் விஜயகாந்தின் மகன் சண்முக பாண்டியன் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமான பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
அதில் அவர், "உங்களின் இதயபூர்வமான இரங்கல்களுக்கு எங்களின் நன்றிகள். நீங்கள் கொடுத்த ஆதரவு அனைத்துமே என்னுடைய அப்பா எந்த மாதிரியான வாழ்க்கையை வாழ்ந்துள்ளார் என்பதை காட்டுகிறது".
"இந்த கடுமையான நேரத்தில், எங்கள் குடும்பத்திற்கு ஆறுதலை கொடுத்துள்ளது என்று கூறியுள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |