புற்றுநோயிலிருந்து பாதுகாக்கும் கடுகு கீரை! நன்மைகள் என்னென்ன?
கடுகு கீரையில் எண்ணற்ற சத்துக்கள் அடங்கியுள்ள நிலையில் இதன் பயன்களை குறித்து இங்கு தெரிந்து கொள்வோம்.
கடுகு கீரை
கடுகு கீரை (mustard greens), தாவர வகைப்பாடு (Brassica juncea), மேலும் பொதுவாக, இந்தியக் கடுகு, சீனக் கடுகு அல்லது கடுகு இலை இவ்வாறான பெயர்களில் அறியும் இது, பூக்கும் தாவர இனத்தைச் சார்ந்தாகும்.
செடி வகையைச் சார்ந்த கடுகுக்கீரை, சுமார் 4 அடி உயரம் வரை
வளரக்கூடியது. இத்தாவரத்தின் இலைகள் (கீரை), பசுமையாகவும்,
மென்மையாகவும் காணப்படுகிறது.
இந்த இனத்தில் kale, collard கீரைகள், ப்ரோக்கோலி மற்றும் காலிஃபிளவர் ஆகியவை அடங்கும். பொதுவாக பச்சை மற்றும் வலுவான கசப்பான, காரமான சுவை கொண்டவை.
கடுகு கீரையின் நன்மைகள்
Calcium phosphate திரண்டக்கூடிய தன்மை கொண்ட வைட்டமின்-ஏ நிறைந்த
இந்த கடுகுக்கீரையானது சிறுநீரக கற்கள் உண்டாகாமல்
தடுக்கிறது.
கடுகு கீரைகள் உங்கள் நோயெதிர்ப்பு மண்டலத்திற்கு நன்மை பயக்கிறது. ஒரு கப் (56 கிராம் பச்சையாக, 140 கிராம் சமைக்கப்பட்டது) உங்கள் தினசரி வைட்டமின்- சி தேவையில் மூன்றில் ஒரு பங்கை வழங்குகிறது.
Prostate, பெருங்குடல், வயிறு, மூக்கு மற்றும் வாய்வழி புற்றுநோய்கள் போன்றவையிலிருந்து பாதுகாக்கின்றது.
கண்களின் ஆரோக்கியத்திற்கு நன்மை அளிக்கும் Anti oxidant களில் lutein மற்றும் zeaxanthin ஆகிய இரண்டு சேர்மங்களும் காணப்படுகின்றது.
இந்த கீரையில் இருக்கும் வைட்டமின் கே எலும்பு ஆரோக்கியத்திற்கு முக்கிய பங்கு வகிக்கின்றது.
கடுகுக்கீரை தொக்கு ரெசிபி
தேவையான பொருட்கள்:
- கடுகு கீரை - 2 கட்டு
- பாலக்கீரை - 1 கட்டு
- வெந்தய கீரை - 1 கட்டு
- மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
- சீரக தூள் - 1/2 தேக்கரண்டி
- கடுகு எண்ணெய் - 3 தேக்கரண்டி
- வெண்ணெய் - 2 தேக்கரண்டி
- வெங்காயம் - 1/2 கப் (சிறிதாக நறுக்கப்பட்ட)
- பச்சை மிளகாய் - 2
- இஞ்சி, பூண்டு - 2
செய்முறை:
மிளகாய், இஞ்சி, உப்பு, நீருடன் நன்கு நறுக்கிய பாலக்கீரை, வெந்தயக்கீரை மற்றும் கடுகுக்கீரை சேர்த்து 1/2 மணி நேரம் வேக வைக்கவும்.
ஒரு கடாயில் சீரக தூள், பூண்டு, வெங்காயம், மிளகாய் தூள் ஆகியவற்றை எண்ணெயில் போடு நன்கு வதக்கவும்.வேகவைத்த கீரைகளுடன் சேர்த்து நன்கு கொதிக்கவைத்து 10 நிமிடம் கழித்து இறக்கவும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |