பிளாஸ்டிக் பேட் வியாபாரம் செய்யும் விஜயகாந்த் தம்பி! பலரும் அறியாத உண்மை
நடிகரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்தின் சகோதரர்கள் மதுரையில் உள்ள அவர்கள் செய்யும் தொழில் விபரம் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஜயகாந்த்
தேமுதிக கட்சியில் தலைவராகவும், எதிர் கட்சிக்கு சிம்ம சொப்பனமாகவும் இருந்த விஜயகாந்த் கடந்த வெள்ளிக்கிழமை உயிரிழந்தார்.
பல லட்சக்கணக்கான மக்களுக்கு மத்தியில் சென்னை தேமுதிக அலுவலகத்தில் சந்தன பேழைக்குள் விஜயகாந்த் விதைக்கப்பட்டுள்ளார்.
நடிகர் விஜயகாந்த் உடன் பிறந்தவர்கள் 11 பேர் ஆவார். இதில் 6 சகோதரர்கள் 5 சகோதரிகள் என்று உள்ள நிலையில், விஜயகாந்தின் மூத்த அண்ணன் பெயர் நாகராஜ்.
இரண்டாவது மகனாக விஜயராஜ் என்ற விஜயகாந்த் பிறந்துள்ளார். இவர்களுக்கு அடுத்ததாக செல்வராஜ், ராம்ராஜ், பிரித்விராஜ், விஜயலட்சுமி, சித்ரா, திருமலாதேவி, சாந்தி என்று அடுத்தடுத்து பிறந்துள்ளனர்.
தற்போது செல்வராஜ் மற்றும் பால்ராஜ் மட்டுமே மதுரையில் பூர்வீக வீட்டில் வசித்து வரும் நிலையில், மற்றவர்கள் வெவ்வேறு ஊர்களில் வசித்து வருகின்றனர்.
மதுரை மேலமாசிவீதியில் ஆண்டாள் பவனம் என்ற தனது பூர்வீக வீட்டில் வசித்து வரும் நிலையில், செல்வராஜ் குழந்தைகள் விளையாடும் பிளாஸ்டிக் பேட், பந்துகளை வடமாநில வியாபாரிகளிடமிருந்து மொத்தமாக வாங்கி வியாபாரம் செய்து வருகின்றனர்.
அரசியலில் நுழைவதற்கு முன்பு பூர்வீக வீட்டிற்கு செல்வதும் தம்பிகளுக்கு உதவி செய்தும் வந்துள்ளார். பிற்காலத்தில் அரசியலுக்கு வந்த பின்பு பூர்வீக வீட்டிற்கு செல்வதை குறைத்துக் கொண்டுள்ளார். ஆனாலும் தனது சகோதர சகோதரிகளுக்கு உதவி செய்தே வந்துள்ளார்.
பின்பு அண்ணனை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று அண்ணனிடம் உதவி கேட்பதை நிறுத்திவிட்டு அவரவர் தொழிலில் கவனம் செலுத்தி வந்துள்ளனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |