உடலில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக உள்ளதா? இந்த பதிவு உங்களுக்கே
ஹீமோகுளோபின் குறைபாடு உள்ளவர்கள் அதன் அளவை அதிகரிப்பதற்கு என்ன உணவுகளை எடுத்துக் கொள்ளலாம் என்பதை இங்கு தெரிந்து கொள்வோம்.
ஹீமோகுளோபின்
ஹீமோகுளோபின் என்பது இரும்புச்சத்து நிறைந்த புரதம் ஆகும். இவை ரத்த சிவப்பக்களில் இருக்கும் நிலையில், இதன் அளவு குறைந்தால் ரத்த சோதகை ஏற்படுகின்றது.
ரத்தத்திற்கு சிவப்பு நிறத்தை அளிப்பதுடன், நுரையீரலிலிருந்து மற்ற பகுதிகளுக்கு ஆக்ஸிஜனை எடுத்துச் செல்வது இதன் முக்கிய வேலையாகும்.
ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க இரும்பு சத்து நிறைந்த உணவுகளை சாப்பிடுவது அவசியம். நமது உடம்பில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது பல பிரச்சினைகளை நாம் சந்திக்கக் கூடும்.
ஒரு ஆணுக்கு 13.5 முதல் 17.5 கிராமும் மற்றும் பெண்ணுக்கு 12.0 முதல் 15.5 கிராம் வரை டெசிலிட்டருக்கு ஹீமோகுளோபின் தேவைப்படுகிறது.
ஹீமோகுளோபினை அதிகரிக்கும் உணவுகள்
காய்கறிகள், முட்டைகள், தானியங்கள், பருப்பு வகைகள், அசைவ உணவுகள் போன்றவற்றை எடுத்துக் கொள்ளவும்.
போலிக் அமிலம் என்பது பிகாம்ப்ளக்ஸ் வைட்டமின் ஆகும். இவை உடலில் ரத்த சிவப்பணுக்களை உருவாக்க உதவுவதால், இவை குறைவாக இருந்தாலும் ஹீமோகுளோபின் அளவும் குறையுமாம். ஆதலால் பச்சைக் காய்கறிகள், வேர்க்கடலை, வாழைப்பழம், ப்ரக்கோலி, ஈரல் போன்றவை சாப்பிடவும்.
மாதுளையில் இரும்புச்சத்து மற்றும் நார்ச்சத்து அதிகமாக உள்ளதால் இவை ஹீமோகுளோபினை அதிகரிக்க உதவுகின்றது.
பேரிட்சை பழத்திலும் ஹீமோகுளோபின் அதிகமாக இருக்கின்றது. நாள் ஒன்றிற்கு 3 பழங்கள் கட்டாயம் எடுத்துக் கொள்ள வேண்டும். ஆனால் நீரிழிவு நோயாளிகள் எடுத்துக் கொள்ள வேண்டாம்.
பீட்ருட்டில் பொட்டாசியம், இரும்புச்சத்து மற்றும் போலிக் அமிலம் போன்றவை உள்ளதால் தினமும் பீட்ரூட் ஜுஸ் எடுத்துக் கொள்ளவும்.
பருப்பு, வேர்க்கடலை, பட்டாணி மற்றும் பீன்ஸ் போன்ற பருப்பு வகைகள் உடலில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கச் செய்யும் உணவு வகைகள் ஆகும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |