பல நன்மைகளை தரும் ஏகாதசி விரதத்தை கடைப்பிடிப்பது எப்படி?
விரதத்தில், அமாவாசை விரதம், பௌர்ணமி விரதம், சஷ்டி விரதம் என பல வகையான விரதங்கள் உள்ளது. ஆனால், ஏகாதசி விரதத்துக்கு தனித்துவமான மகத்துவம் உண்டு.
இந்த ஏகாதசி விரதத்தை எவ்வாறு கடைபிடிப்பது, அதன் பலன்கள் என்ன என்பது பற்றி தெரிந்துகொள்வோம்.
ஏகாதசி அன்று தினமும் உண்ணாமல் விரதம் இருக்கவேண்டும். இரவிலும் உறங்காமல் விழித்திருந்து, பகவான் மகா விஷ்ணுவின் திருநாமங்களை ஜபித்தபடி வழிபடவேண்டும்.
இந்த விரத்த்தை கடைப்பிடிப்பதால், நோயற்ற வாழ்க்கை, குறைவற்ற செல்வம், அன்பான பிள்ளைகள் மற்றும் நீடித்த புகழ் அனைத்தையும் இறைவன் அருள்புரிவார் எனது ஐதீகம்.
நீண்ட நாட்களுக்கு பின் சரிந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம்
ஏகாதசி விரதம் அனுஷ்டிப்பதால் கோபம், குரோதம், மாச்சர்யங்கள் விலகி எண்ணங்கள் தூய்மை அடையும். ஏகாதசி உபவாசம் இருப்பது, இந்த ஜன்மாவை நமக்குக் கொடுத்த பரம்பொருளுக்கு, நாம் செலுத்தும் நன்றிக் காணிக்கை என்றே தர்மசாஸ்திரம் கூறுகிறது.

விரதத்தை கடைப்பிடிக்கும் முறைகள்
அதிகாலை எழுந்து குளித்து, தினந்தோறும் செய்யும் பூஜைகள் மற்றும் அனுஷ்டானங்களை நிறைவேற்றிவிட்டு, மகாவிஷ்ணுவை மனதில் இருத்தி வழிபட வேண்டும்.
அடுத்து, பகலிலும் சரி, இரவிலும் சரி தூங்காமல் கண் விழித்து இறைச் சிந்தனையுடன் இருக்க வேண்டும். அப்போது எம்பெருமானைக் குறித்த கதைகள், பாடல்கள் ஆகியவற்றைப் படிக்கலாம், பாடலாம், மற்றவர்கள் சொல்லக் கேட்கலாம்.

மறுநாள் காலையில் பூஜைகளை முடித்து விட்டு, ஏழைகளுக்கு அன்னதானம் அளித்து, அகத்திக் கீரை, நெல்லிக்கனி, சுண்டைக்காய் ஆகியவற்றுடன் உணவருந்த வேண்டும்.
அன்றும் ஒருவேளை மட்டுமே உணவருந்த வேண்டும். பின் இரவு பழங்கள் அல்லது டிபன் சாப்பிட்டு விரதம் முடிக்கலாம்.