2முறை எவிக்ட் செய்யப்பட்ட விஜய் வர்மா வாங்கிய மொத்த சம்பளம் எவ்வளவு தெரியுமா?
பிக்பாஸ் 7 நிகழ்ச்சியில் 2 தடவைகள் எவிக்ட் செய்யப்பட்ட விஜய் வர்மா வாங்கிய சம்பளம் தொடர்பான செய்திகள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
பிக்பாஸ் 7
பிரபல தொலைக்காட்சியில் தமிழில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 97 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டிற்குள் இரண்டு தடவை எவிக்ட் செய்யப்பட்ட போட்டியளராக விஜய் பார்க்கப்படுகிறார்.
சம்பள விவரங்கள்
அந்த வகையில் முதல் தடவை பிரதீப்பிடம் கடுமையாக நடந்து கொண்ட காரணத்தினாலும் இரண்டாவது தடவை மிட் வீக் எவிக்ஷன் மூலமும் இவர் வெளியேற்றப்பட்டார்.
பிக்பாஸ் போட்டியில் இருக்கும் ஒவ்வொருவருக்குமே ஒரு நாளைக்கு குறிப்பிட்ட தொகை பேமண்ட் ஆக கொடுக்கப்படுகிறது. அப்படி, விஜய் வர்மாவிற்கும் ஒரு நாளைக்கு ரூ.15 ஆயிரம் சம்பளமாக கொடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
முதலில் 21 நாட்கள் நிகழ்ச்சியில் இருந்த போது ரூ.3.15 லட்ச ரூபாய் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாம். எவிட்க் ஆன பிறகு, இவர் 56வது நாளில் இந்த இல்லத்திற்குள் மீண்டும் நுழைந்தார்.
அப்போது சுமார் 45 நாட்கள் இந்த நிகழ்ச்சியில் இருந்துள்ளார். இவருக்கு மொத்தமாக ரூ.6.75 லட்சம் சம்பளமாக வழங்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது. அத்துடன் இவ்வளவு நாட்கள் இருந்து விஜய் பணப்பெட்டியை எடுத்திருக்கலாம் என ரசிகர்கள் கருத்துக்களை பதிவு செய்து வருகின்றனர்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |