குறும்படம் போட்டு அழ வைத்த பிக்பாஸ்.. கண்ணீரில் முழ்கிய சீசன் 7 போட்டியாளர்கள்
பிக்பாஸ் போட்ட குறும்படத்தை பார்த்து போட்டியாளர்கள் கண்கலங்கி உள்ளனர்.
பிக்பாஸ்
பிரபல தொலைக்காட்சியில் தமிழில் பிக்பாஸ் 7 நிகழ்ச்சி தொடங்கி 97 நாட்களை கடந்து இறுதி கட்டத்தை நெருங்கி இருக்கிறது.
இந்த சீசனில் கூல் சுரேஷ், பூர்ணி மா ரவி, ரவீனா தாஹா, சுரேஷ், ஆண்டனி, நிக்சன், சரவணா விக்ரம், மாயா எஸ் கிருஷ்ணா, விஷ்ணு, ஜோவிகா, அக்ஷ்யா உதயகுமார், மணிசந்திரா, வினுஷா தேவி, யுகேந்திரன் வாசுதேவன், விசித்ரா, பவா செல்லதுரை, விஜய் வர்மா என்று பலர் பிக் பாஸ் வீட்டிற்குள் சென்று இருந்தார்கள்.
இதுவரை பிக்பாஸ் வீட்டிலிருந்து பவா, வினுஷா மற்றும் யுகேந்திரன், அன்னபாரதி, பிரதீப், ஐஷு, கானா பாலா, அக்ஷயா, பிராவோ, ஜோவிகா, அன்னயா, கூல் சுரேஷ், சரவணா விக்ரம், நிக்சன், ரவீனா, விசித்திரா ஆகியோர் வெளியேறி இருக்கின்றனர்.
மேலும், கடந்த வாரம் பணப் பெட்டி டாஸ்க் நடந்தது. இதில் பூர்ணிமா ரவி 16 லட்ச ரூபாய் பணத்துடன் வெளியேறினார்.
கண்ணீருடன் போட்டியாளர்கள்
இந்த நிலையில் பிக்பாஸ் வீட்டில் இறுதி வாரத்திற்கான டாஸ்க் விறுவிறுப்பாக நடந்து கொண்டிருக்கின்றது.
அந்த வகையில், நாளைய தினம் டைட்டில் வின்னர் யார் என்பதனை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் ரசிகர்கள் இருக்கிறார்கள்.
ஆனால் இப்படியொரு நிலையில் பிக்பாஸ் வீட்டில் இவ்வளவு நாட்கள் நடந்த கவலையான விடயங்களை பிக்பாஸ் குறும்படமாக போட்டு காட்டினார்.
குறித்த காட்சியை பார்த்த அனைத்து போட்டியாளர்களும் கண்ணீருடன் அமர்ந்திருக்கிறார்கள்.
இப்படியாக இன்றைய நாளுக்கான முதல் காட்சி வெளியாகியுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |