விஜய் நியூமராலஜி படி தான் கொடியை அறிமுகம் செய்தாரா? 22-க்கு பின்னால் இருக்கும் ரகசியம்
நடிகர் விஜய் அவருடைய கட்சி கொடியை நியூமராலஜி படி தான் அறிமுகம் செய்துள்ளார் என்ற செய்தி சமூக வலைத்தளங்களில் பரவலாக உள்ளது.
நடிகர் விஜய்
சினிமாவில் முன்னணி நாயகராக இருக்கும் நடிகர் விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்து அரசியலிலும் காலடி எடுத்து வைத்துள்ளார்.
அந்த வகையில், கடந்த சில தினங்களுக்கு தளபதி விஜயின் கட்சி கொடியை அறிமுகம் செய்து மக்கள் முன்னாள் உறுதி மொழியும் எடுத்து கொண்டார்.
அத்துடன் நிறுத்தாமல் எதிர்வரும் 2026 ஆவது சட்டமன்றத் தேர்தலில் போட்டியிடுவதற்காக தற்போது இது போன்ற வேலைகளை விஜய் பார்த்து வருகிறார்.
22 ஆம் தேதி அறிமுகமாகப்படுத்தியது ஏன்?
இந்த நிலையில் நடிகர் விஜய் ஏன் கட்சி கொடியை 22.8.2024 ஆம் தேதியை அன்று வெளியிட்டார் என்பது பலரது சந்தேகமாக உள்ளது.
இதன்படி, நியூமராலஜி படி விஜய்க்கு பிடித்த எண் 4 என்று சொல்லப்படுகிறது.
அந்த அடிப்படையில் தான் விஜய் பயணித்து சென்ற காரின் எண் டிஎன் 37 டிஆர் 1111 இதில் 1111 என்ற எண்ணின் கூட்டுத் தொகையும் 4 ஆகும். அத்துடன் 22 தேதியின் கூட்டுதொகை 4 ஆகும். இதனால் தான் கட்சிக்கொடியை 22 ஆம் திகதி வெளியிட்டிருக்கிறார் என்று கூறப்படுகின்றது.
இப்படி நியூமராலஜி எல்லா விடயங்களையும் செய்யும் விஜய்க்கு வெற்றி கிடைக்குமா என்பதனை பொருத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |