நடிகர் விஜய் மனைவி, பிள்ளைகளை பிரிந்து வாழ்கிறாரா? இஷ்டத்திற்கு கிளப்பி விடும் பிரபலம்
நடிகர் விஜய் அவரது மனைவி சங்கீதாவை பிரிவதற்கான காரணத்தை பத்திரிகையாளர் ஒருவர் கூறியுள்ளார்.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.
இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில் பல விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தாலும் தற்போது டாப் ஹீரோவாக வலம் வருகிறார்.
“பூவே உனக்காக” என்ற படத்தின் மூலம் விஜய்யின் நல்ல நேரம் ஆரம்பமானது. அத்துடன் இந்த திரைப்படத்தின் மூலம் தான் பெண்கள், குழந்தைகள் விஜய்யின் ரசிகர்களாக மாறினார்கள்.

இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமே லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர்.
விஜய் படம் என்றாலே கட்டாயம் 200 கோடி வசூலை கடக்கும் என்ற நிலையே வந்துவிட்டது. இதனால் “வசூல் கிங்” எனவும் அழைப்படுகிறார்.
இதற்கிடையில் நடிகர் விஜய் லண்டனை சேர்ந்த ரசிகை ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.

வதந்தியை கிளப்பி விடும் பத்திரிகையாளர்
இந்த நிலையில் விஜய் சமீபக் காலமாக மனைவி, பிள்ளைகளை பிரிந்து வாழ்ந்து வருவதாக சமூக வலைத்தளங்களில் தகவல் வெளியாகி வருகின்றது. அதற்கு ஆதரவளிக்கும் வகையில் அவரின் மனைவியும் விஜய் சம்பந்தப்பட்ட நிகழ்வுகளிலும் கலந்து கொள்வதில்லை.
விஜய் - சங்கீதா பற்றி கருத்து தெரிவித்த பத்திரிகையாளர் சேகுவேரா,“ விஜய் - திரிஷா விவகாரத்தில் திரிஷாவால் பிரச்சினை பெரிதானது. இதற்கு இருவரும் மறுப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் திரிஷா கண்டிப்பாக மறுப்பு தெரிவித்திருக்க வேண்டும்.

விஜய் அரசியல் கட்சி தொடங்கியிருக்கிறார். அவர் தரப்பை பொறுத்தவரை விஜய் அரசியலுக்கு வருவது சங்கீதாவுக்கு பிடிக்கவே இல்லை. அந்தப் பிரச்னை வேறு அங்கு ஓடிக்கொண்டிருக்கிறது" என பேசியிருக்கிறார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
இதனை பார்த்த விஜய் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW | 
 
                 
                 லங்காசிறி FM
                                லங்காசிறி FM
                             
                             
                             
                             
                             
                             
                             
                                             
         
     
     
     
     
     
     
     
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
         
        