திருமணத்திற்கு கூட பணமில்லாமல் திண்டாடும் பிரதீப் ஆண்டனி- இறுதி முடிவு என்ன ?

DHUSHI
Report this article
பிக்பாஸ் சீசன் 7 மூலம் பிரபலமான பிரதீப் ஆண்டனிக்கு நிச்சயதார்த்தம் முடிந்து நிலையில் திருமணம் குறித்து புதிய செய்தியொன்று வைரலாகி வருகின்றது.
பிரதீப் ஆண்டனி
பிரபல தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிய பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பட்டிதொட்டியெங்கும் அறியப்பட்டவர் தான் பிரதீப் ஆண்டனி.
இந்த நிகழ்ச்சியில் பிரதீப் மீது பெண்கள் இருக்கும் இடங்களில் மோசமாக நடந்து கொள்கிறார் என்ற குற்றச்சாட்டு முன் வைக்கபட்டு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
மேற்குறிப்பிட்ட குற்றச்சாட்டை விசாரிக்காமல் பெண்களுக்கு ஆதரவு கொடுத்து ஆண்டவர் முடிவு எடுத்த காரணத்தினால் சமூக வலைத்தளங்களில் கடுமையாக ட்ரோல் செய்யப்பட்டார்.
திருமணம் குறித்தான கேள்விக்கு பதில்
இந்த நிலையில், வெளியேறிய பின்னர் பிரதீப்பின் ஆதரவாளர்கள் பிக்பாஸ் நிகழ்ச்சி மீது கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். பிரதீப், அன்று முதல் இன்று வரை என்ன செய்தாலும் அவை இணையத்தில் வைரலாகி வருகிறது.
அந்த வகையில் பிரதீப் ஆண்டனிக்கு கடந்த மாதங்களுக்கு முன்னர் நிச்சயதார்த்தம் நடந்து முடிந்துள்ளது.
இதன்போது எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து, “எனக்கெல்லாம் நடக்காது என்று நினைத்தேன். பரவாயில்லை என்னை நம்பி பொண்ணு கொடுத்துவிட்டார்கள்.” என குறிப்பிட்டிருந்தார்.
இதற்கிடையே திருமணம் குறித்தான கேள்விக்கு பதில் அளித்த பிரதீப், “நான் காசு சேர்த்து வைத்த பிறகு தான் கல்யாணம் செய்து கொள்வேன். இந்த முடிவில் நான் உறுதியாக உள்ளேன் ” எனக் கூறியுள்ளார்.
இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |