இரட்டை குழந்தை ரகசியம் உடைகின்றதா? கடும் பதற்றத்துடன் சௌந்தர்யா... வேதனையில் கண்ணம்மா?
விஜய் டிவியில் ஒளிப்பரப்பாகும் பாரதி கண்ணம்மா சீரியலில் தன் இரண்டாவது குழந்தையின் ரகசியத்தை தெரிந்து கொள்வதற்காக பாரதி வீட்டுக்கு வந்த கண்ணம்மா அந்த ரகசியத்தை தெரிந்து கொள்ளுவாரா என்பது குறித்து ரசிகர்கள் ஆர்வமாக உள்ளனர்.
இரட்டை குழந்தைகள் பிறந்த விஷயம் கண்ணம்மாவுக்கு தெரிந்துவிட்டதால், என்ன சொல்லி சமாளிப்பது என பதற்றமாகிறாள் சௌந்தர்யா. கண்ணம்மா காலில் விழுந்தால் தான் இந்த பிரச்சனையை சமாளிக்க முடியும் என சௌந்தர்யா சொல்ல, சமாளிப்போம் என ஆறுதல் சொல்கிறார் வேணு.
அடுத்து, ஹேமா, கண்ணம்மாவிடம் எங்க அப்பா கனவில் வந்தார், அவர பார்க்கணும் போல் இருக்கு என சொல்கிறாள். உன்ன உங்க வீட்டில் கொண்டு போய் விட்டுறேன் என கண்ணம்மா சொல்ல, சந்தோஷமாகிறாள் ஹேமா.
பின்னர் ஹேமா, தன் தோழியோடு போனில் பேசுவதை பார்க்கும் கண்ணம்மா, என் பொண்ணு அங்க இருக்கா, அவரு பொண்ணு இங்க இருக்கா, இதெல்லாம் ஏன் நடக்குது, இன்னொரு பொண்ண பத்தி அத்தைக்கிட்ட கேட்கணும் என முடிவெடுக்கிறாள்.
அப்போது சோகமாக, இருக்கும் கண்ணம்மாவிடம் உங்க பொண்ணு ஞாபகம் வந்துருச்சா என கேட்கிறாள் ஹேமா. ஆமா என சொல்லும் கண்ணம்மா, உன்ன பிரியுறதும் கஷ்டமா இருக்கு என்கிறாள். ஹேமாவிடம், அடிக்கடி இங்க வரணும் என சொல்லி அழைத்துச் செல்கிறாள் கண்ணம்மா.
அடுத்து, பாரதி ஹாஸ்பிட்டலுக்கு கிளம்பாததால், கண்ணம்மா வந்தால் என்ன செய்வது என கவலையாகிறாள் சௌந்தர்யா.
அப்போது ஹேமாவோடு வருகிறாள் கண்ணம்மா. பின்னர், ஹேமா பாரதியிடம் போய் கொஞ்சிக்கொண்டிருக்க, கண்ணம்மாவைப் பார்த்ததும், சமையல் அம்மா என போய் கட்டிக்கொள்கிறாள் லட்சுமி.
இதையெல்லாம் பதற்றத்துடன் பார்க்கும் சௌந்தர்யா, என்ன நடக்க போகுதோ என ஒளிந்துக்கொள்கிறாள். வேணு, எதுவா இருந்தாலும் சமாளிக்கணும் என சொல்ல, அவங்க என்ன பேசிக்கிறாங்கனு பார்ப்போம் என மறைந்து இருந்து பார்க்கிறாள். அப்போது, பாரதி, ஹேமாவ பார்த்துக்கிட்டதுக்கு நன்றி என சொல்லி, உனக்கு ஏதாவது பணம் கொடுக்கனும் என சொல்ல, நான் அன்பை விக்கிறதில்ல என காட்டமாக சொல்கிறாள்.
உடனே பாரதி, உன் பொண்ண கூட்டிட்டு வா, லட்சுமியை படிக்க வைப்பதுப்போல் படிக்க வைக்கிறேன் என சொல்கிறான். ஆனால், கண்ணம்மா உங்க பெருந்தன்மைக்கு நன்றி, என் பொண்ண எனக்கு படிக்க வைக்க தெரியும் என கோபமாக கூறுகிறாள்.
நான் வந்த விடயம் வேறு என கண்ணம்மா கூற பாரதி அதை என்ன என்று கேட்கிறார். உடனே கண்ணம்மா பாரதியிடம் இரட்டை குழந்தை விடயத்தை உகூறுவாரா அல்லது சென்று விடுவாரா என்று தெரிய வில்லை. கூறினால் பாரதி கண்ணம்மாவில் மற்றொரு புதிய திருப்பம் உள்ளது. பார்க்கலாம் என்ன நடக்கும் என்பதை...