கணேஷ் வருகையால் கலங்கி நிற்கும் குடும்பம்.. வேறு வழியில்லாமல் கோபி எடுத்த முடிவு
கணேஷ் வருகையால் கண்கலங்கி நிற்கும் எழிலுக்கு ஆறுதல் சொல்ல முடியாமல் பாக்கியா புலம்பி வருகிறார்.
பாக்கியலட்சுமி
பிரபல தொலைக்காட்சியில் விறுவிறுப்பாக சென்றுக் கொண்டிருக்கும் தொடர் தான் பாக்கியலட்சுமி.
இந்த சீரியலில் எழில் அமிர்தா சந்தோசமாக வாழ்ந்து கொண்டிருக்க, அவர்களின் வாழ்க்கையில் கணேஷ் என்ட்ரி கொடுக்கிறார்.
மீண்டும் கணேஷை உயிருடன் பார்த்த அமிர்தாவிற்கு அவரை ஏற்றுக் கொள்ள மனம் இல்லை. ஏனெனின் அமிர்தா எழிலுடன் வாழ நினைக்கிறார்.
இதனை அழுது கொண்டு எழிலிடம் வெளிப்படுத்துகிறார். இவர்களின் பிரச்சனை வீடு வரை வர, பாக்கியாவிற்கு என்ன செய்வது என தெரியாமல் இருக்கிறது. வேறு வழியில்லாமல் கோபியிடம் வந்து உதவி கேட்கிறார்.
கோபி எடுத்த முடிவு
ராதிகாவை பக்கத்தில் வைத்து கொண்டு கோபி என்ன பேசுவார் என ரசிகர்கள் எதிர்பார்த்த வேலையில் இன்றைய தினம் வெளியான காட்சியில் பாக்கியாவிற்கு தைரியம் கூறுகிறார்.
பிரச்சினைக்கு கண்டிப்பாக கோபி ஒரு முடிவு எடுப்பார் என பாக்கியலட்சுமி ரசிகர்கள் எதிர்பார்த்து கொண்டிருக்கிறார்கள்.
இந்த நிலையில், வீடு தேடி வந்த கணேஷிடம் “ இது என் மகனுடைய மனைவி, உனக்கு இனி அமிர்தா வாழ்க்கையில் உரிமை இல்லை” என சொல்கிறார். அவர் உறுதியாக பேச, கணேஷ் எதுவும் பேச முடியாமல் கிளம்பி செல்கிறார்.
பொலிஸிடம் செல்ல வேண்டும் என கணேஷ் கோபமாக வீட்டை விட்டு வெளியில் செல்கிறார்.
அடுத்தடுத்து என்னென்ன நடக்க போகின்றது, பாக்கியா எழில்- செழியன் வாழ்க்கையை எப்படி காப்பாற்றுவார் என்பதனை பொறுத்திருந்து காணலாம்.
இன்றைய தினம் வெளியான ப்ரோமோ காட்சியை பார்த்த இணையவாசிகள்,“ ஒரு அப்பாவாக கோபி இன்று தான் சரியாக நடந்து கொண்டுள்ளார்...” என கருத்துக்களை பதிவு செய்து வருகின்றார்கள்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |