இனி ஆன்லைன் பரிவர்த்தனை செய்ய முடியாது... யாரெல்லாம்னு தெரியுமா?
புத்தாண்டு பிறந்த நிலையில் ஆன்லைன் பண பரிவர்த்தனை செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. யாரெல்லாம் இந்த சிக்கலில் சிக்கியுள்ளனர் என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
NPCI வெளியிட்ட அறிவிப்பு
புத்தாண்டு பிறந்திருக்கும் நிலையில், பல விதிமுறைகளில் மாற்றங்களும் நேற்றைய தினம் கொண்டுவரப்பட்டுள்ளது. நேஷனல் பேமென்ட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா (NPCI), யூபிஐ மூலம் பரிவர்த்தனை செய்வதற்கு புதிய விதிகளை கொண்டு வந்துள்ளது. இதனால் ஒரு வருடத்திற்கும் மேலாக ஆன்லைன் பரிவர்த்தனைகளை மேற்கொள்ளாத UPI ஐடிகள் நேற்று முதல் செயல்படாமல் இருக்கின்றது.
செயலற்ற UPI ஐடிகளைத் முடக்குவதற்கான வழிமுறைகளை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்ட நிலையில், தற்போது இந்த முடிவை அமலுக்கு கொண்டு வந்துள்ளனர்.
யூனிஃபைட் பேமெண்ட்ஸ் இன்டர்ஃபேஸ் (UPI) தற்போது பணம் செலுத்துபவர்களின் முக்கிய தேர்வாக உள்ள நிலையில், டிஜிட்டல் பண பரிவர்த்தனைகளும் தற்போது அதிகமாகியுள்ளது.
இவை மக்களுக்கு மிகவும் வசதியாகவும், சுலபமாகவும் இருக்கின்றது. Paytm, Google Pay, PhonePe போன்ற பேமெண்ட் ஆப்ஸ் மற்றும் வங்கிகள் என அனைத்து நிறுவனங்களும் ஒருவருடத்திற்கு மேலாக செயல்படாத UPI ஐடிகளை நிறுத்தியுள்ளது.
மேலும் இது செயலற்ற கணக்குகளை துஷ்பிரயோகம் செய்வதற்கான வாய்ப்புகளைக் கட்டுப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
அதிகரித்த பரிவர்த்தனை வரம்புகள்
NPCI, UPI பரிவர்த்தனைகளுக்கான வரம்பு தற்போது 1 லட்சமாக அதிகரித்துள்ளது. மேலும் கல்வி மற்றும் சுகாதார வசதிகளுக்கான UPI பரிவர்த்தனை வரம்பு, 5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது.
மேலும் ஆன்லைன் மோசடிகள் அதிகரித்து வரும் நிலையில், ரூ.2000த்திற்கு மேல் பணம் அனுப்பவர்களுக்கு நான்கு மணி நேர அவகாசம் இருப்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.
ரிசர்வ் வங்கியானது UPI ATMகளை நாடு முழுவதும் அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. ஏடிஎம்கள் மூல் உங்களது வங்கிக்கணக்கிலிருந்து QR குறியீட்டை ஸ்கேன் செய்து நேரடியாக பணத்தை எடுக்கலாம்.
[
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள். JOIN NOW |