தடைகளை தாண்டி நாளை முதலமைச்சராக பதவியேற்கிறார் விஜய் : ஏற்பாடுகள் தீவிரம்!
நாளை காலை 11;30 மணிக்கு தவெக தலைவர் விஜய் பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளதால் விஜய் ரசிகர்கள் மற்றும் தொண்டர்கள் உச்சகட்ட மகிழ்ச்சியில் உள்ளனர்.
நடிகரும் தவெக தலைவருமான விஜய் அரசியலில் கால் பதித்தது முதலே பல்வேறு சர்ச்சைகளிலும் சிக்கி வருகின்றார்.

சினிமாவில் கோடிகளில் சம்பளம் பெறும் முன்னணி நடிகெரா திகழ்ந்த விஜய் தன்னை உயர்த்திய ரசிகர்களுக்கும் தமிழ் நாட்டு மக்களுக்கு நன்றிகடன் செலுத்த வேண்டும் என்ற நோக்கிவேயே அரசியலில் களமிறங்கினார்.
2026 ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) 108 தொகுதிகளில் வெற்றிபெற்ற போதிலும் ஆட்சி அமைப்பதில் தெளிவான பெரும்பான்மை கிடைக்காததால் இன்று வரையில் சிக்கல் நிலவி வந்தது.

நாளை முதல்வராகும் விஜய்
இந்நிலையில்,5 எம்எல்ஏக்களை வைத்துள்ள காங்கிரஸ், 20 வருட திமுக கூட்டணியை முறித்து தவெக கூட்டணியில் இணைந்தது. நேற்று காலை 11;30 மணிக்கு தவெக தலைவர் விஜய் முதலமைச்சராக பதவியேற்க திட்டமிட்டு, ஆட்சியமைக்க அழைப்பு விடுக்குமாறு தமிழ்நாடு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகரா உரிமை கோரினார்.
ஆனால், ஆட்சியமைக்க பெரும்பான்மைக்கு 118 எம்எல்ஏக்கள் தேவை என்ற நிலையில், ஆட்சியமைக்க அழைப்பு விடுக்க ஆளுநர் மறுத்து விட்டார்.

இதனையடுத்து, விசிக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகளிடம் தவெக ஆதரவு கோரியது இதனையடுத்து, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிகள் தவெக ஆட்சியமைக்க நிபந்தனையற்ற ஆதரவை வழங்குவதாக அறிவித்துள்ளன.
மேலும், விசிகவும் தங்களது ஆதரவை மின்னஞ்சல் மூலமாக அனுப்பியதாக தகவல் வெளியானது. இதனையடுத்து, 118 எம்எல்ஏக்களின் ஆதரவு கடிதத்துடன் தவெக தலைவர் விஜய் இன்று 3வது முறையாக ஆளுநரை சந்தித்து உரிமை கோரியுள்ளார்.

இந்நிலையில், நாளை காலை 11;30 மணிக்கு நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் விஜய் தழஜழக முதல்வராக பதவியேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மேலும் ஆட்சியமைக்க ஆதரவு தெரிவித்த கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்திற்கு நேரில் சென்று விஜய் நன்றி தெரிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.
விஜய் முதல்வராவது உறுதியாகியிருப்பது அவரின் ரசிகர்களுக்கும், தவெக தொண்டர்களுக்கும் உச்சகட்ட மகிழ்ச்சியை கொடுத்திருக்கிறது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |