வாழ்க்கையில அதிகமாக கஷ்டப்படும் ராசிக்காரங்க யார்னு தெரியுமா?
வாழ்க்கையில் மற்றவர்களை விட அதிகமாக கஷ்டப்படும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.
பொதுவாக வாழ்க்கை என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. நிச்சயம் ஏற்றத்தாழ்வுகள், அதிகமாக இருக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின்படி, நம்முடைய பிறந்தராசி நாம் எதிர்கொள்ளவேண்டிய போராட்டங்கள், வாழ்க்கையின் அம்சங்களையும் நிர்ணயிக்கின்றது.
அவ்வாறு தான் பிறந்த ராசியின் படி அதிகமான சோதனையை மேற்கொள்ளும் ராசியினரைக் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

மகரம்
மகர ராசியினருக்கு அதிபதியாக இருப்பது சனி பகவான் ஆகும். சிறுவயது முதல் பெரியவர்கள் ஆகும் வரை மகர ராசியினர் பொறுப்புடன் நடந்து கொள்ள நினைக்கின்றனர்.
இவர்கள் வாழ்க்கையில் அனைத்து விடயங்களும் தாமதம், பின்னடைவு என சந்திக்கின்றனர். அவ்வளவு எளிதாக இவர்களுக்கு வெற்றி கிடைப்பதில்லை. மிகவும் வலிமையானவராக இவர்களை மாற்ற இதுவே காரணம்.
மற்றவர்களைவிட அதிகமான போராட்டத்தை சந்திப்பதுடன் ஆனால் ஒருபோதும் முயற்சியை கைவிட மாட்டார்கள்.

விருச்சிகம்
விருச்சிக ராசியினரை செவ்வாயால் ஆளப்படும் ராசியாகும். இவர்களும் சிறுவயதிலிருந்தே வலி, துரோகம், போராட்டங்களை எதிர்கொள்பவர்களாக இருக்கின்றனர்.
தனிமையை விரும்பும் இவர்கள் தங்களத வாழ்க்கையில் பெரிய மாற்றங்கள், இழப்புகளை சந்திக்கின்றனர். ஆனால் இதுவே இவர்களை சக்திவாய்ந்தவர்களாக மாற்றுகின்றது.
ஒவ்வொரு போராட்டமும் இவர்களை சாம்பலில் இருந்து எழும் பீனிக்ஸ் பறவை போன்று மாற்றுகின்றது.

மீனம்
மீன ராசியினர் மிகவும் உணர்ச்சிவசப்பட்டகூடியவர்களாகவும், மற்றவர்களின் வலியை உள்வாங்கி கொள்கிறார்கள்.
அளவுக்கு அதிகமாக அக்கறை காட்டுவது, பெரிய கனவுகளை காண்பது, மற்றவர்களை எளிதில் நம்பிவிடுவதால் பல சிரமங்களுக்கு ஆளாகுகின்றனர்.
எதார்த்தத்தினை விட தங்களது உணர்ச்சிகளில் அதிகம் வாழ்வதால், இவர்களுக்கு வாழ்க்கை கடினமாக தோன்றலாம்.
காதல் வாழ்க்கையில் அதிக சவால்களை சந்திக்கும் இவர்கள், சவால்களின் மூலம் கருணையையும், படைப்பாற்றலையும் வளர்த்து கொள்கின்றனர்.

கன்னி
கன்னி ராசியினரை கிரகங்களின் இளவசனான புதன் ஆள்வதால், அதிகமாக சிந்திப்பதற்கும், கடுமையாக தங்களை விமர்சித்து கொள்வதற்கும் பெயர் பெற்றவர்கள்.
கடினமாக உழைத்தாலும், போதுமான விடயத்தினை பெறுவதில்லை என்று நினைத்து அதிக போராட்டங்களை எதிர்கொள்கின்றனர்.
கட்டுப்பாட்டை கைவிட்டு குறைகளை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று நினைப்பதுடன், உடல், மன ரீதியான போராட்டங்களையும் சந்திக்கின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |