விஜய்யின் தங்கையா இவர்? தற்போது என்ன தொழில் செய்கிறார் தெரியுமா?
கில்லி படத்தில் விஜய்யின் தங்கையான நடித்து ரசிகர்கள் மத்தியில் புகழ்பெற்ற நடிகை ஜெனிபர் சொந்தமாக தொழில் ஒன்றை தொடங்கி நடத்தி வருகிறார்.
கில்லியில் கலக்கிய ஜெனிபர்
விஜய்யின் கெரியரில் முக்கியமான படம் கில்லி, அதிரடி ஆக்ஷன் கதாநாயகனாக கலக்கியிருப்பார்.
இந்த படத்துக்கு பின்னர் நகைச்சுவையிலும் அசத்த தொடங்கினார் விஜய்.
இதில் விஜய்யின் தங்கையாக ஜெனிபர் நடித்திருந்தார், அண்ணன் தங்கைக்கு இடையேயான பாசம், செல்லமான சண்டைகள் என படமே ரசிக்கும் படியாக இருக்கும்.
நாயகியாக நடிக்க ஆசை
2004ம் ஆண்டு வெளியான இப்படத்தில் ஜெனிபர் கதாபாத்திரம் இன்றுவரை பேசப்படுகிறது.
கில்லி படத்தில் நடித்த குட்டி பெண்ணா இது? என பலரும் அதையே கேட்டு வருகிறார்களாம்.
தனக்கு நாயகியாக நடிக்க ஆசை இருந்தும், மக்கள் இன்னும் ஜெனிபர் கதாபாத்திரத்தில் இருந்து வெளியே வராததால் தன்னால் ஜொலிக்க முடியவில்லை என சிறிது வருத்தத்துடன் பேசியுள்ளார் ஜெனிபர்.
இந்நிலையில் கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை ஆதரிப்பதாகவும் பேசியிருந்தார்.
சொந்தமாக தொழில்
இதற்கிடையே கடந்த சில வருடங்களாக சினிமாவில் இருந்து ஒதுங்கியிருக்கும் ஜெனிபர் சொந்தமாக ஆயுர்வேத முறைப்படி சோப்பு தயாரிக்கும் நிறுவனத்தை நடத்தி வருகிறாராம்.
5 ஆண்டுகளாக தன்னுடைய பெற்றோருடன் சேர்ந்து இதை செய்து வருவதாக தெரிவித்துள்ளார்.
எந்தவித ரசாயனங்களும் இல்லாமல் இயற்கையான முறையில் சோப்பு தயாரித்து விற்று வருகிறாராம்.
தங்களுடைய தயாரிப்புகளுக்கு அதிக வரவேற்பு கிடைப்பதாகவும் தெரிவித்துள்ளார்.