கோடிகளில் சம்பாதிக்கும் விஜய் சேதுபதிக்கும் கடன் இருக்கின்றதா? அவரே கூறிய உண்மை
நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சியினை தற்போது தொகுத்து வழங்கி வரும் நிலையில், தன்னுடைய கடன் குறித்து பேசியுள்ளது வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய் சேதுபதி
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் நடிகர் விஜய் சேதுபதி மிஷ்கின் இயக்கத்தில் டிரெயின் என்ற படத்தில் நடித்து வருகின்றார்.
அதுமட்டுமின்றி பூரி ஜெகநாத் இயக்கத்தில் புதிய படம் ஒன்றிலும் நடித்து வருகின்றார். மேலும் பிக் பாஸ் நிகழ்ச்சியினையும் சனி மற்றும் ஞாயிறு கிழமைகளில் தொகுத்து வழங்கி வருகின்றார்.
இந்நிகழ்ச்சியினை அவர் தொகுத்து வழங்கும் விதத்திற்கே ஏகப்பட்ட ரசிகர் பட்டாளம் உள்ளனர். கடந்த சில தினங்களுக்கு முன்பு இவர் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பேசிய விடயம் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
அதாவது பிக் பாஸ் வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களில் சிலர் தான் நடிக்க செல்ல வேண்டும், சிலர் மக்கள் மத்தியில் பிரபலமாக வேண்டும் என்று வந்துள்ளனர்.
ஆனால் ஒரு சிலர் தனது கடனை அடைப்பதற்காக பிக் பாஸ் வீட்டிற்குள் வந்துள்ளதும் நமக்கு தெரிந்ததே. இதனால் கடனை அடைக்கும் அளவிற்கு பணம் வந்தால் போதும் என்ற மனநிலையில் இருப்பதாக கூறியவர்களுக்காக அவர் பேசியுள்ளார்.
தன்னையே அத்தருணத்தில் உதாரணமாக கூறியது ரசிகர்களுக்கு ஆச்சரியத்தினை ஏற்படுத்தியுள்ளது. அதாவது நான் ஆயிரத்தில் சம்பாதித்த போது அதே ஆயிரத்திற்கு கடன் இருந்தது என்றும் லட்சத்தில் சம்பாதிக்கும் போது அதற்கு ஏற்ப கடன் இருந்தது என்றும் கூறியுள்ளார்.
மேலும் அவர் கூறுகையில், தற்போது கோடிகளில் சம்பாதிக்கிறேன்... ஆனாலும் அந்த கடன் பிரச்சனை எனக்கு இருக்கவே செய்கின்றது. ஆதலால் அதனுடனேயே வாழ கற்றுக்கொண்டுள்ளதாகவும், வாழ்க்கையினை அதன் ஓட்டத்திலேயே வாழ்வது தான் சவால் என்றும் விஜய் சேதுபதி பேசியுள்ளார்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |