ரெட் கார்டு வாங்கிய பார்வதிக்கு விஜய் சேதுபதி கொடுத்த வாய்ப்பு... குழப்பத்தில் ரசிகர்கள்
பிக் பாஸில் ரெட் கார்டு வாங்கி சென்ற பார்வதிற்கு விஜய் சேதுபதி வாய்ப்பு ஒன்றினை கொடுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
பிக் பாஸ்
பிரபல ரிவியில் ஒளிபரப்பாகி சில வாரங்களுக்கு முன்பு முடிந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டவர் தான் பார்வதி.
இவர் அடிக்கடி தவறு செய்துவிட்டு விஜய் சேதுபதியிடம் திட்டு வாங்குவதை வழக்கமாக வைத்திருந்தார். பார்வதி என்றாலே சண்டை என்ற அளவிற்கு இருந்தது.
குறித்த நிகழ்ச்சியில் வெற்றியாளராக திவ்யா இருந்த நிலையில், இவருக்கு 50 லட்சம் ரூபாய், கார் பரிசாக கிடைத்துள்ளது. ஆனால் நிகழ்ச்சி முடிவதற்கு சில தினங்கள் இருந்த நிலையில், பாரு கம்ருதின் ரெட் கார்டு வாங்கி சென்றனர்.
இது இந்நிகழ்ச்சியில் மிகப்பெரிய பேச்சுப்பொருளாகவே இருந்தது. ஆனால் பிரபல ரிவி ஃபினாலே அன்று இருவரையும் மேடைக்கு அழைத்து ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சியும் கொடுத்தது.

வாய்க்கு கொடுத்த விஜய் சேதுபதி
இந்நிலையில் ரெட் கார்டு கொடுத்து வெளியே அனுப்பப்பட்ட பார்வதிக்கு விஜய் சேதுபதி வாய்ப்பு ஒன்றினை கொடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது விஜய்சேதுபதி தான் ப்ரொடக்ஷன் மூலம் பார்வதிக்கு வெப் சீரிஸ் ஒன்றில் வாய்ப்பு கொடுக்க போகிறாராம். மேலும் விஜய் சேதுபதி தயாரித்து வரும் முத்து என்கிற காட்டான் வெப் சீரிஸில் தான் பார்வதி நடிப்பதற்கு வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் யூகித்து வருகின்றனர்.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |