பிரம்மாண்ட சமையல் ஷோவில் விஜய் சேதுபதி! வெளியான வேற லெவல் காட்சி... என்ன சொல்லிருக்காருனு பாருங்க
உலகம் முழுவதும் சமையல் நிகழ்ச்சிகளுக்கென்று ஒரு தனி ரசிகர்கள் பட்டாளமே இருக்கின்றனர்.
தமிழிலும் கூட சமையல் எனும் ஒரு கருவியை வைத்து பரபரப்பான நிகழ்ச்சிகள் சேனல்களிலும் யூடியூப்களிலும் ஒளிபரப்பாகி வருகிறது.
இதனிடையே இந்த பிரம்மாண்ட நிகழ்ச்சிக்கான பிரம்மாண்ட புரோமோவில் விஜய் சேதுபதி தோன்றும் விளம்பரங்கள் அவ்வப்போது சன்.டி.வியில் வெளியாகி வருகின்றன.
சமையல் கலையை கொண்டாடிடும் ரியாலிட்டி நிகழ்ச்சி!
— Sun TV (@SunTV) May 12, 2021
மாஸ்டர் செஃப் - தமிழ் | விரைவில்... #SunTV #MasterChef #MasterChefTamil #MasterChefOnSunTV @VijaySethuOffl pic.twitter.com/YOQfkkSW8W
இதன் ஒரு புரோமோவில் ஹெலிகாப்டரில் மாஸாக வந்திறங்கும் விஜய் சேதுபதி, “இது மாஸ்டர் செஃப் தமிழ் சமையல் நிகழ்ச்சி.. விரைவில் உங்கள் சன்.டிவியில்” என அந்த ப்ரோமோவில் பேசுகிறார்.
தற்போது இரண்டாவது ப்ரோமோ வெளியாகி மேலும் எதிர்பார்ப்பினை கிழப்பியுள்ளது. இந்தநிகழ்ச்சியை ரசிகர்கள் தற்போது எதிர்ப்பார்த்து காத்திருக்கின்றனர்.