த்ரிஷாவின் அப்பாவை பார்த்ததுண்டா? படுவைரலாகும் அரிய புகைப்படங்கள்
நடிகை த்ரிஷா பற்றிய விடயங்கள் தான் அண்மைகாலமாக இணையத்தில் அதிகம் தேடப்பட்டு வருகின்றது. அதற்கு முக்கிய காரணம் நடிகரும் தவெக கட்சி தலைவருமான விஜயுடன் த்ரிஷா இணைந்து பங்கேற்ற திருமண நிகழ்வு தான்.
இன்னும் சொல்லப்போனால் விஜய்- சங்கீதா விவாகரத்து சர்ச்சைககளுக்கு மத்தியிலும் த்ரிஷா விஜயுடன் கலந்துக்கொண்டதால் இணையமே போர்களமாக மாறியிருக்கின்றது என்றால் மிகையாகாது.

விஜய் நடிகை ஒருவருடன் திருமணத்தை மீறிய உறவில் இருப்பதாக குற்றம் சாட்டி மனைவி சங்கீதா விவாகரத்து கோரியுள்ள நிலையில், அதனை பறைசாற்றும் வகையில், தயாரிப்பாளர் ஏஜிஎஸ் இல்ல திருமண நிகழ்ச்சிக்கு விஜய் நடிகை த்ரிஷா உடன் ஒரே நிறத்தில் ஆடை அணிந்து ஒரே காரில் வந்திருந்தால் தான் இந்த பரப்பரப்பு கிளம்பியிருந்தது.
நடிகை திரிஷா
தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை திரிஷா. மாடலிங் துறையில் பணியாற்றி மிஸ் மெட்ராஸ் என்ற பட்டத்தினை 1999ம் ஆண்டு பெற்றார்.

பின் அப்படியே சினிமாவில் நுழைந்து தமிழ் மற்றும் தெலுங்கில் பல படங்கள் நடித்து வந்தார். தமிழில் பிரசாந்த்-சிம்ரன் நடித்த ஜோடி திரைப்படத்தில் நாயகியின் தோழியாக நடிப்பை தொடங்கிய திரிஷா பின் லேசா லேசா படம் மூலம் நாயகியானார்.
அதன்பிறகு தொட்டதெல்லாம் ஜெயம் என்பது போல் அவர் நடிக்கும் படங்கள் அனைத்தும் ஹிட்டாகி வந்தன. ஏரதாழ 22 வருடங்களாக சினிமாவில் தன்னை கதாநாயகியானவே தக்கவைத்துக்கொண்ட த்ரிஷாவுக்கென தனி ரசிகர் பட்டாளமே இருக்கின்றது.

சினிமாவில் திரிஷா இவ்வளவு உயரத்துக்கு வருவதற்கு அவருக்கு துணையாக இருந்தது அவரது அம்மா தான். என பல பேட்டிகளில் த்ரிஷா கூறியிருக்கின்றார். அடிக்கடி திரிஷா அவரது அம்மாவுடன் எடுத்த புகைப்படத்தை வெளியிடுவது வழக்கம்.

ஆனால் அவரது அப்பாவின் புகைப்படங்கள் மட்டும் அவ்வளவாக வெளியானது கிடையாது. இந்நிலையில் த்ரிஷா தனது தந்தையுடன் எடுத்துக்கொண்ட, பெரும்பாலானவர்கள் பார்த்திராத புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.

நடிகை த்ரிஷாவின் தந்தை கிருஷ்ணன், தனது 66 ஆவது வயதில் அக்டோபர் 2012 ஆம் ஆண்டு அக்டோபர் 18 ஆம் திகதி மாரடைப்பால் காலமானார் என்பது குறிப்பிடத்தக்கது.

| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |