தளபதி விஜய்- சங்கீதாவின் திருமண அழைப்பிதழை பார்த்ததுண்டா?
நடிகர் விஜய் - சங்கீதாவின் திருமண அழைப்பிதழ் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நடிகர் விஜய்
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமாக திகழ்பவர் தான் நடிகர் விஜய்.
இவர் சினிமாவிற்கு வந்த ஆரம்ப காலங்களில் பல விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தாலும் தற்போது டாப் ஹீரோவாக வலம் வருகிறார்.
“பூவே உனக்காக” என்ற படத்தின் மூலம் விஜய்யின் நல்ல நேரம் ஆரம்பமானது. அத்துடன் இந்த திரைப்படத்தின் மூலம் தான் பெண்கள், குழந்தைகள் விஜய்யின் ரசிகர்களாக மாறினார்கள்.
இவருக்கு தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதுமே லட்சக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். விஜய் படம் என்றாலே கட்டாயம் 200 கோடி வசூலை கடக்கும் என்ற நிலையே வந்துவிட்டது. இதனால் “வசூல் கிங்” எனவும் அழைப்படுகிறார்.
இதற்கிடையில் நடிகர் விஜய் லண்டனை சேர்ந்த ரசிகை ஒருவரை திருமணம் செய்து கொள்கிறார். இவர்களுக்கு தற்போது இரண்டு பிள்ளைகள் இருக்கிறார்கள்.
திருமண அழைப்பிதழ்
இந்த நிலையில் விஜய் - சங்கீதாவின் திருமண அழைப்பிதழ் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அழைப்பிதழை பார்க்கும் போது எவ்வளவு பணம் இருந்தாலும் அழைப்பிதழ் மிகவும் சிம்பிளாக உள்ளது.
விஜய் ஒரு கிறிஸ்தவர், சங்கீதா ஹிந்து மதத்தை சேர்ந்தவர் என்பதற்காக இவர்களின் திருமணம் ஹிந்து முறைப்படி திருமணம் நடைபெற்றது.
இவர்களின் திருமணம் 1999-ம் ஆண்டு ஆகஸ்ட் 25-ம் தேதி சென்னை எழும்பூரில் உள்ள ராணி மெய்யம்மை திருமண மண்டபத்தில் நடைபெற்றது என்றும் அந்த அழைப்பிதழில் குறிப்பிடப்பட்டுள்ளது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |