அணைக்க முயன்ற பிரான்ஸ் அதிபர்... நழுவிச் சென்ற பெண் பிரதமர்!
An Unexpected Moment Between Macron and Iceland’s PM Goes Viral : அயர்லாந்தின் டப்ளின் நகரில் நடைபெற்ற ஐரோப்பிய அரசியல் சமூக உச்சிமாநாட்டின்போது, பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மெக்ரான் மற்றும் ஐஸ்லாந்து பெண் பிரதமர் கிறிஸ்டின் பிரோஸ்டா டோட்டிர் இடையே இடம்பெற்ற ஒரு சம்பவம் தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாகியுள்ளது
அணைக்க முயன்ற பிரான்ஸ் அதிபர்...
உலகத் தலைவர்கள் பலரும் கலந்துகொண்ட இந்த மாநாட்டின்போது, ஐஸ்லாந்து பிரதமரை அன்புடன் கட்டியணைத்து வாழ்த்துவதற்கு மெக்ரான் முயன்றார். ஆனால், அவரது அணைப்பை ஏற்காமல் ஐஸ்லாந்து பிரதமர் சற்று பின்வாங்கியுள்ளது புகைப்படங்கள் மற்றும் காணொளிகளில் பதிவாகியுள்ளது.

அந்தத் தருணத்தில் கிறிஸ்டின் பிரோஸ்டா டோட்டிர் சற்று சங்கடமான நிலையில் காணப்பட்ட போதிலும், மெக்ரான் புன்னகைத்தபடியே இருந்தார். இந்தச் சம்பவம் தொடர்பான காணொளி தற்போது சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவி வருகிறது.

மேலும், இதற்கு முன்னரும் இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் மெக்ரான் இதேபோன்ற ஒரு சூழ்நிலையை எதிர்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
| சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |