ஏன் இப்படி பம்முற.. இதெல்லாம் உன்கிட்ட யார் சொன்னது? பார்த்தவுடன் கண்டித்த விஜய் நண்பர்
“ஏன் இப்படி ஆகிட்ட..இதெல்லாம் உன்கிட்ட யார் சொன்னது?” என விஜயின் நண்பர் தன்னை கண்டித்ததாக கீர்த்தி சுரேஷ் பேட்டியில் கூறியுள்ளார்.
நடிகை கீர்த்தி சுரேஷ்
தென்னிந்திய சினிமாவில் பிரபலமாக இருக்கும் வாரிசு நடிகர்களில் ஒருவர் தான் நடிகை கீர்த்தி சுரேஷ்.
இவர் நடித்த முதல் படமே ரசிகர்கள் மத்தியில் கீர்த்தி சுரேஷிற்கு நல்ல வரவேற்பை பெற்றுக் கொடுத்தது.
இதனை தொடர்ந்து விஜய், சூர்யா, விஷால் என கோலிவுட் முன்னணி நடிகர்களுடன் ஜோடி சேர ஆரம்பித்து விட்டார்.
தற்போது தெலுங்கு, மலையாளம், ஹிந்தி, தமிழ் பல மொழிப்படங்களில் நடித்து வருகிறார்.
தேசிய விருது வாங்கிய நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ், தனக்குள் இருக்கும் மொத்த காதலையும் சினிமாவில் காட்டி நடித்து வருகிறார்.
கண்டித்த விஜய் நண்பர்
இந்த நிலையில் இவர் சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டியொன்றில் பேசியது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
அதாவது, “ விஜய்யின் நண்பர்- சஞ்சீவ்வை நான் சார் என்று தான் அழைப்பேன். அவரை பார்த்தால் மட்டும் ஏன் இப்படி பம்முற என்று அவரது மனைவி ப்ரீத்தி கேட்பார். ஒருமுறை நான் உடல் இளைத்துவிட்டேன். அப்போது என்னை சஞ்சீவ் சந்தித்தார்.
அந்த சமயத்தில் என்னிடம் “ஏன் நீ இப்படி ஒல்லி ஆகிட்ட...” இப்படி ஆக சொல்லி உன்னிடம் யார் சொன்னது?” என்று உரிமையோடு கேட்டார்.” எனக் கூறினார்.
இந்த செய்தி தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |