நாக சைதன்யா - சோபிதா திருமணம் எங்க நடக்க போகிறது தெரியுமா?
நாக சைதன்யா - சோபிதா துலிபாலாவின் திருமணம் நடக்கப் போகின்ற இடம் தொடர்பான தகவல்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
நாக சைதன்யா - சோபிதா
தமிழ் சினிமாவில் விஜய் போல் தெலுங்குத் திரையுலகின் பிரபலமான நடிகராக இருப்பவர் தான் நடிகர் நாகார்ஜுனா.
இவருடைய மூத்த மகனும் நடிகருமான நடிகர் நாக சைதன்யா, சோபிதா துலிபாலா என்ற நடிகையை இரு ஆண்டுகளாக காதலித்து வந்துள்ளார்.
இவர்களின் காதலின் வெளிபாடாக வீட்டிலுள்ளவர்கள் சம்பதத்துடன் கடந்த ஆகஸ்ட் 8ஆம் திகதி திருமண நிச்சயதார்த்தம் செய்துக் கொண்டுள்ளனர்.
அத்துடன் திருமணம் திகதி விரைவில் அறிவிக்கப்படும் எனவும் குறிப்பிட்டுள்ளனர்.
இவர்களின் திருமண நிச்சயதார்த்த புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வெளியான முதல் பல சர்ச்சையான கருத்துக்களை இணையத்தில் உலா வருகின்றன.
திருமணம் எங்க தெரியுமா?
இந்த நிலையில், நாக சைதன்யா - சோபிதா துலிபாலா தம்பதியினரின் திருமணம் எப்போது? எங்கு நடக்கப் போகின்றது? என்ற சந்தேகம் பலரிடம் இருந்து வந்தது.
அதற்கு பதிலடி கொடுக்கும் விதமான இவர்களின் திருமணம் ஹைதராபாத்தில் இருக்கும் ராமோஜி ஃபிலிம் சிட்டியில் பிரமாண்டமாக நடக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனை தொடர்ந்து திருமண தேதி குறித்த அறிவிப்பு மிக விரைவில் வெளியிடப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |