மூக்கு, தாடை எலும்புகள் உடைந்து ஆபத்தான நிலையில் நடிகர் விஜய்ஆண்டனி! தற்போது இவரின் நிலை என்ன?
மலேசியாவில் பிச்சைக்காரன் 2 படத்தின் படப்பிடிப்பில் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்த விஜய் ஆண்டனி தற்போது தனது உடல்நலம் குறித்த தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
விஜய் ஆண்டனி
பிரபல இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனி பிச்சைக்காரன் 2 படத்தில் நடித்துவரும் நிலையில், மலேசியாவில் லங்காவி தீவில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.
இந்நிலையில் படப்பிடிப்பில் சண்டைக் காட்சிகளைப் படமாக்கியபோது ஏற்பட்ட படகு விபத்தில் விஜய் ஆண்டனி விபத்தில் சிக்கினார். இந்த விபத்தில் அவரது முகத்தில் பலத்த காயம் ஏற்பட்ட நிலையில், சுயநினைவு இல்லாமல் இருந்ததாகவும் தகவல் வெளியானது.
பின்பு சென்னைக்கு அழைத்து வரப்பட்ட விஜய் ஆண்டனிக்கு, தாடை மற்றும் மூக்கில் காயம் ஏற்பட்டதால், பெரிய அறுவை சிகிச்சை முடிந்ததாக சமீபத்தில் தகவல் வெளியிட்டிருந்தார்.
தற்போதைய நிலை என்ன?
கடந்த வாரம் தான் படிப்படியாக குணமாகி வருவதாக மருத்துவமனையில் இருந்து புகைப்படம் ஒன்றை வெளியிட்டிருந்த விஜய் ஆண்டனிக்கு, ரசிகர்கள் பிரார்த்தனை செய்து வந்தனர்.
தற்போது விஜய் ஆண்டனி டுவிட்டரில் கூறியுள்ளது, “அன்பு இதயங்களே, நான் 90% குணம் அடைந்து விட்டேன். உடைந்த என் தாடை, மூக்கு எலும்புகள் ஒன்று சேர்ந்துவிட்டன. என்னமோ தெரியவில்லை, நான் இப்போது முன்பைவிட அதிக சந்தோஷத்தை உங்களால் உணருகிறேன்.
வரும் ஏப்ரல் மாதம் வெளியாகும் பிச்சைக்காரன் 2 பட வேலைகளை இன்று முதல் தொடங்குகிறேன். அன்புக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார்.