விவாகரத்தா? வெள்ளி விழா கொண்டாட்டத்தில் தளபதி குடும்பத்தினர்- சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைப்பாரா விஜய்!

DHUSHI
Report this article
மனைவி சங்கீதாவை விஜய் விவாகரத்து செய்யப்போவதாக கூறி வந்த நிலையில் தற்போது அவரின் திருமண நாளை சிறப்பாக கொண்டாடி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
விஜய்
கோலிவுட்டில் சிறந்த நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவர் நடிப்பில் இன்னும் சில மாதங்களில் “லியோ” திரைப்படம் வெளிவரவிருக்கின்றது.
இந்த நிலையில் நடிகர் விஜய் தன்னுடைய ரசிகையான சங்கீதாவை கடந்த 1999 ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
விஜயிற்கும் இலங்கைக்கும் நெருங்கி தொடர்பு இருக்கின்றது. ஏனெனின் விஜயின் மனைவி சங்கீதா இலங்கையை சார்ந்தவர். இவர்களுக்கு சஞ்சய் என்ற மகனும், திவ்யா என்ற மகளும் இருக்கிறார்கள்.
இந்த நிலையில், சங்கீதா தங்களின் குழந்தைகளின் படிப்பிற்காக வெளிநாட்டில் வசித்து வருகிறார். அத்துடன் விஜய் பட பிடிப்பு மற்றும் அரசியல் சேவைகள் என பிஸியாக இருப்பதால் விஜய் தனியாக இருந்து வருகிறார்.
விவாகரத்து மத்தியில் நடக்கும் விஷேசம்
இது ஒரு புறம் இருக்கையில், நடிகர் விஜய் சங்கீதாவை விவாகரத்து செய்யப்போவதாகவும், நடிகை கீர்த்தியுடன் நெருங்கிய தொடர்பில் இருப்பதாகவும் பல சர்ச்சைகள் எழுந்தன.
ஆனால் இது குறித்து இருவரும் எந்தவிதமான சலனமும் வெளியில் காட்டிக் கொள்ளவில்லை.
விவாகரத்து என கூறிக் கொண்டிருக்கும் நிலையில் விஜய் - சங்கீதாவுடன் இணைந்து திருமண நாளை கொண்டாடி வருகிறாராம்.
சர்ச்சைகளுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றால் விஜய் அவர் குடும்பத்துடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டால் போதும் என விஜய் ரசிகர்கள் ஆசைப்படுகிறார்கள்.
இதனை விஜய் செய்வாரா என்பதனை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |