அன்னையர் தின வாழ்த்து சொன்ன விக்னேஷ்: மகன்களுடன் நயன் கொடுத்த ரியக்ஷன்
நேற்று அன்னையர் தினத்தில் நயனுக்கு விக்னேஷ் வாழ்த்து கூறியதற்கு மகன்களுடன் நயன் கொடுத்த போஸ் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றது.
நயன்தாரா விக்னேஷ்
நடிகை நயன் மற்றும் இயக்குநர் விக்கி கடந்த 2022ஆம் ஆண்டு காதலித்து திருமணம் செய்து கொண்டார்கள். இவர்களுக்கு உயிர் மற்றும் உலக் என இரட்டை ஆண் குழந்தைகள் உள்ளனர்.
நயனும் விக்னேஷீம் சினிமாவில் எவ்வளவு பிஸியாக இருந்தாலும் குடும்பத்தில் நேரத்தை செலவிட மறக்க மாட்டார்கள். மே மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை உலகம் முழுவதும் அன்னையர் தினம் கொண்டாடப்படுகிறது.
சில நாடுகளில் மார்ச் மாதமே கொண்டாடப்படுகிறது. இந்தியாவில் மே மாதம் கொண்டாடப்படுவதால், இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது மனைவியும் நடிகையுமான நயன்தாரா, தங்களின் குழந்தைகள் இருவரையும் இடுப்பில் வைத்துக் கொண்டு
அவர்களுடன் விளையாடும் புகைப்படத்தை பகிர்ந்து அன்னையர் தின வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் பதிவில் அன்னையர் தின வாழ்த்துகள் தங்கமே! என நயனை டேக் செய்து வாழ்த்து பகிர்ந்துள்ளார்.
சுவாரஸ்யமான செய்திகளை நொடிப் பொழுதில் தெரிந்து கொள்ள மனிதன் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் FOLLOW NOW |