நயன்தாராவிற்காக விக்கி இப்படி இறங்கிட்டாரே? வாயடைத்துப் போன ரசிகர்கள்
நடிகை நயன்தாராவின் ஹனிமூன் செலவையும் பிரபல ஒளிபரப்பு நிறுவனம் ஏற்றுக் கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
நயன் விக்கி திருமணம்
நடிகை நயன்தாராவும் விக்னேஷ் சிவனும் 7 ஆண்டுகள் காதலுக்கு பிறகு கடந்த ஜூன் மாதம் திருமணம் செய்து கொண்டனர். ஜூன் 9 ஆம் தேதி மகாபலிபுரத்தில் உள்ள ஸ்டார் ஹோட்டலில் அவர்களின் திருமணம் நடைபெற்றது. இதில் பிரபலங்கள் பலரும் பங்கேற்றனர்.
தற்போது இரண்டாவது ஹனிமூன் ஸ்பெயினில் கொண்டாடிய இவர்கள், பல புகைப்படங்களை வெளியிட்டு வந்ததோடு, கடந்த வாரம் இந்தியாவிற்கு வந்தனர்.

வேலையினை ஆரம்பித்த விக்கி
நயன்தாராவை திருமணம் செய்வதற்கு முன்பு திரைப்படங்கள் மட்டுமே இயக்கி வந்த விக்னேஷ் சிவன், திருமணத்திற்கு பின், பல்வேறு விஷயங்களில் கவனம் செலுத்தி வருவதை பார்க்க முடிகிறது.
ஒலிம்பியாட் நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளராக பணியாற்றிய விக்கி, தற்போது நயன்தாராவுக்காக விளம்பர படங்களையும் இயக்கியுள்ளார்.
காதல் மனைவி நயன்தாரா நடித்துள்ள பிரபல பிராண்டின் விளம்பர படத்தை விக்னேஷ் சிவன் தான் இயக்கி உள்ளார். இதுகுறித்த, விளம்பர பலகையை காரில் சென்று கொண்டிருக்கும் போது, எடுத்து வெளியிட்டுள்ள விக்னேஷ் சிவன் 'இதுதான் என் முதல் டிவி விளம்பரம்' என தெரிவித்து இருக்கிறார்.
இதை பார்த்து ரசிகர்கள் முன்னனி நடிகர்களை வைத்து படம் இயக்க வாய்ப்பு கிடைத்தும், நயன்தாராவுக்காக விளம்பர படம் இயக்கும் அளவுக்கு வந்து விட்டாரே என கூறி வருகிறார்கள்.
