குழந்தையை கவனிக்க அம்மா செய்த செயல்- வைரல் காணொளி
தூங்கும் போது குழந்தையை கவனிக்க அம்மா செய்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
குழந்தை பராமரிப்பு
பொதுவாக குழந்தைகள் பிறந்தது முதல் வளர்ந்து ஆளாகும் வரை அவர்களை பராமரிப்பது சற்று சிரமமான வேலை தான்.
அதிலும் பிறந்து ஆறு மாதம் முடியும் வரை அவர்களை அம்மாக்கள் மிகுந்த கவனத்துடன் கவனித்து கொள்ள வேண்டியது கட்டாயம்.
பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் அதிக கவனம் தேவை.
அவர்கள் தூங்குவதில் ஏதாவது சிக்கல் வந்து விட்டால் பெற்றோர்களால் விடிய விடிய தூங்க முடியாது.
இந்த நிலையில் தூங்கும் குழந்தையை கவனித்து கொள்ள அம்மா ஒருவர் செய்த செயல் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.
அம்மா எடுத்த முடிவு
அதில், குழந்தையை மெதுவாக தூங்க வைத்து விட்டு உணவு எடுத்து கொள்வதற்காக சென்ற அம்மா குழந்தை எவ்வாறு உறங்குகின்றது என்பதனை பார்த்து கொள்வதற்காக வீடியோ கோலை ஒன் செய்து குழந்தையிடம் வைத்து விட்டு சென்றுள்ளார்.
அம்மா சாப்பிடும் கொண்டு இன்னொரு தொலைபேசியால் குழந்தை எப்படி தூங்குகின்றது என்பதனை பார்த்து கொண்டு சாப்பிடுகிறார்.
இந்த செயல் வீடியோவாக பதிவு செய்து சமூக வலைத்தளங்களில் பதிவிட்டுள்ளனர்.
இதனை பார்த்த இணையவாசிகள், தாயின் இந்த செயலுக்கு பாராட்டுக்கள் தெரிவித்துள்ளனர்.
High tech.. High tech தான்..😍 pic.twitter.com/jRd9MwJle9
— ⛈️ராஜா முகமது⛈️ (@Itz_Rmd) July 20, 2023